யாழில் உயர் சாதி பெண் நாயுடன் காதல் லீலையில் ஈடுபட்ட உள்ளூர் நாய்க்கு கால் முறித்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் பல்லும் காதும் போனது!!

0
223

யாழில் உயர் சாதி பெண் நாயுடன் காதல் லீலையில் ஈடுபட்ட உள்ளூர் நாய்க்கு கால் முறித்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் பல்லும் காதும் போனது!!

யாழில் உயர்சாதி பெண் நாயுடன் உடலுறவு வைத்த ஊர் நாயை அடித்து கால்களை முறித்துள்ளார்

பெண் நாயை வளர்க்கும் உரிமையாளர். இதனால் ஊர்நாயின் உரிமையாளருக்கும் பெண் நாயின் உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பெண் நாயின் உரிமையாளர் இரு பற்கள் உடைந்த நிலையிலும் ஆண் நாயின் உரிமையாளர் காது கிழிந்த நிலையிலும் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதனிடையே இவர்கள் இருவரையும் ஒரே வைத்தியாசலைக்கு அயலவர்கள் அழைத்துச் சென்றபோது அங்கும் இருவரும் கட்டிப் புரண்டு சண்டை போட முற்பட்டுள்ளனர். 

இதனால் இருவரையும் வெவ்வேறு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்குட்படுத்தியுள்ளனர்

அயலவர்கள். இதனிடையே கால் முறிக்கப்பட்ட ஊர் நாயை பெண் நாயின் உரிமையாளரின் மனைவி மிருக வைத்தியரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளித்து அவர்களது வீட்டில் விட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இரு வீட்டாரும் அந்நியோன்யமாக பழகி வருபவர்கள் எனவும் ஆண் நாய் செய்த திருவிளையாடலாலேயே இவர்கள் கடுமையாக மோதியுள்ளனர்

எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருவரும் கௌரவமான அரச ஊழியர்கள் எனவும் தெரியவருகின்றது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: