மெட்ரோவில் வாந்தி, செக்ஸ் டார்ச்சர் அலறி அடித்து ஓடும் பெண்கள்எ எல்லை மீறும் பயணிகள்.!

0
81

மெட்ரோவில் வாந்தி, செக்ஸ் டார்ச்சர் அலறி அடித்து ஓடும் பெண்கள்எ எல்லை மீறும் பயணிகள்.!
நம் நாடு வளர்ச்சி அடைகிறது என்பதை பறைசாற்றுதில் மெட்ரோ ரயிலுக்கு முக்கிய பங்கு உள்ளது.

இது போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஆனால் இந்த மெட்ரோவை நாம் சரியான முறையில் கையாள்வதில்லை என்பது பல விஷயங்களில் தெரிய வருகிறது.

பெங்களூரில் கடந்த 2011ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை அமலில் உள்ளது. இதற்கு முன்பு இரவு 10 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இருந்தது.

எனவே மெட்ரோ ரயில் சேவையை நள்ளிரவு வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 1ம் தேதி முதல் நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஒருபக்கம் பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் மறு பக்கம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

அதாவது இரவு 10 மேல் மெட்ரோ ரயிலில் ஏறும் பயணிகள் பெரும்பாலும் குடிபோதையில்தான் வருகின்றனர்.

அவர்கள் செய்யும் கலாட்டாக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ரயிலில் வாந்தி எடுப்பது, காறி துப்பி அசிங்கம் செய்வது என பல்வேறு அட்டூழியங்களை செய்கின்றனர்.

மேலும் பெண் பயணிகளிடம் ஆபாசமாக பேசுவது, சீண்டி சில்மிஷம் செய்வது போன்ற கெட்ட காரியங்களிலும் ஈடுபடுகின்றனர். இது பெண் பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதனால் 10 மணிக்கு மேல் மெட்ரோவை பயன்படுத்துவதா வேண்டாமா என்ற கேள்வியை பெண் பயணிகளை ஏற்படுத்தி உள்ளது.

எனவே பெண் பயணிகள் பாதுகாப்பிற்காக மெட்ரோவுக்கு வரும் பயணிகள் குடித்திருக்கிறார்களா என பரிசோதனை செய்து அனுப்ப வேண்டும்.

அவர் குடிபோதையில் இருந்தால் மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதிக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: