மூன்று வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு.

0
64

மூன்று வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு.

வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டு, மூன்று வயது சிறுமி ஒருவர், நேற்று, யாழ். போதனா வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளார்.

சண்டிலிப்பாய் கல்வளை வீதியை சேர்ந்த, 3 வயதுடைய விஜிதரன் அபிசினி என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார்.

குறித்த சிறுமிக்கு நேற்று முன்தினம் தொடர்ச்சியான வயிற்றோட்டமும் காய்ச்சலும் இருந்துள்ளது.

அன்று மாலை 5.30 அளவில் தனியார் வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றார்.

நேற்றைய தினமும் வயிற்றோட்டம், தொடர்ச்சியாக இருந்ததால் உடல் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, 6.40 அளவில் மேலதிக சிகிச்சைக்காக, யாழ். போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி. சிறுமி நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த மரண விசாரணையை, யாழ் போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி, நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டது டன், சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: