முல்லைதீவில் இரு பிள்ளைகளின் தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக!

0
62

முல்லைதீவில் இரு பிள்ளைகளின் தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக!

முல்லைத்தீவு – சிலவத்தை பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இதன்போது சிலவத்தை மாதிரி கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் ஞானேஸ்வரி என்ற 37 வயது பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: