மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு.

0
88

மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு

மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது, இதனால் அங்கு பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. இந்த சூழலில் தெற்கு மும்பையில் பிந்தி பஜார் பகுதியில் மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் காலை 8:30 மணிக்கு இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதமாக தொடங்கியது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆம்புலன்ஸ்கள், மருத்துவ உதவியாளர்கள் கட்டிடம் இடிந்து விழுந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. குடோன்கள், வீடுகள் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 30 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டிடம், மும்பையில் பெய்த கனமழையால் பலம் இழந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: