முன்னாள் கணவரால் இளம்பெண் கௌரவ கொலை!

0
70

பிரித்தானிய அழகியல் நிபுணரான இளம்பெண்ணை கெளரவ கொலைக்கு தூண்டியதாக கருதப்படும் அவரது தந்தை மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானை பூவீகமாக கொண்ட சாமியா ஷாகித்(28) என்பவர் கணவருடன் இங்கிலாந்தின் பிராட்போர்ட் பகுதியில் குடியிருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வைத்து அவரது முன்னள் கணவர் முகம்மது ஷகில் என்பவரால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இச்சம்பவத்திற்கு சாமியாவின் சொந்த தந்தையும் உடந்தை என அவரது தற்போதை கணவர் பிரபல ஊடகம் ஒன்றில் சமீபத்தில் வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் பிணையில் வெளியில் இருக்கும் சாமியாவின் தந்தை சௌத்ரி முகமது ஷாஹித்(52) லாகூரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் மரண காரணம் என்னவென்பது இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக சாமியா பாகிஸ்தானில் உள்ள தமது குடியிருப்பில் வைத்து மாரடைப்பால் மரணமடைந்தார் என்றே தகவல் வெளியிடப்பட்டது.

ஆனால் உடற்கூறு ஆய்வில் அவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

பெற்றோரின் நிர்பந்தத்தின் பேரில் அவரது உறவினர் முகம்மது ஷகில் என்பவரை திருமணம் செய்து கொண்ட சாமியா, பின்னர் கடும் சித்திரவதைக்கு நாள்தோறும் உள்ளாகியுள்ளார்.

இதனால் மனமுடைந்த சாமியா பிரித்தானியாவில் குடியிருக்கும் சையத் மொக்தார் கஸம் என்பவரை 2014 ஆம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

மேலும் முன்னாள் கணவரை ரகசியமாக விவாகரத்தும் செய்து கொண்டுள்ளார். மட்டுமின்றி தமது இரண்டாவது கணவருடன் துபாயில் சென்று குடியேறினார்.

இந்த நிலையில் தமது தந்தைக்கு உடல் நிலை மோசமாக உள்ளது என சாமியாவை பஞ்சாபில் வரவழைத்து, அவரது தந்தையும் முன்னாள் கணவர் ஷலிலும் இணைந்து கெளரவ கொலை செய்தனர்.

பாகிஸ்தானில் ஆண்டு தோறும் 1,000 பெண்கள் காதல் மற்றும் திருமணம் தொடர்பாக கெளரவ கொலை செய்யப்படுவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

முன்னாள் கணவரால்
முன்னாள் கணவரால்
கணவரால் இளம்பெண் கௌரவ
கணவரால் இளம்பெண் கௌரவ
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: