ஆயிரம் இரவுகள் வரலாம் ஆனால் முதலிரவு போல் வருமா?

0
757

பெரும்பாலான முதலிரவுகள் இப்படித்தான் முடிகின்றதாம்… தெரியுமா உங்களுக்கு?

ஆயிரம் இரவுகள் வரலாம் ஆனால் முதலிரவு போல் வருமா?

ஆனால், அந்த முதலிரவு நாளில் பாதிப் பேர் எதுவுமே செய்யாமல் படுத்து விடுகிறார்கள் என்று ஓர் ஆய்வு கூறியுள்ளது.

முதலிரவு
முதலிரவு

பாலிருக்கு… பழமிருக்கு.. என்று சினிமாவில் பாடிக்கொண்டே முதலிரவு சீன் வைத்திருப்பார்கள். அப்புறம் லைட் அணைந்து விடும். நிஜ வாழ்க்கையில் பாதி பேருக்கு பாலும் இல்லாமல் பழமும் இல்லாமலேயே லைட் அணைந்து விடுகிறதாம்.
இது உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறீர்களா?

எல்லாம் சமீபத்தில் வெளியான ஒரு கருத்துக் கணிப்புத் தான் இதைச் சொல்கிறது. முதலிரவில் புது மணத் தம்பதிகள் உறவு வைத்து கொள்கிறார்களா? என்பது குறித்து ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது.

இதெற்கெல்லாமா கருத்துக் கணிப்பு எடுப்பார்களா என்று கேட்காதீர்கள். எல்லாம் ஒரு பொது அறிவுக்காக எடுத்து விட்டார்கள். இந்த சர்வே மூலம்தான் 52% தம்பதிகள் முதலிரவில் உறவில் ஈடுபடுவது இல்லை என்று தெரியவந்துள்ளது
திருமண அசதி திருமண நாளில் காலையில் இருந்து படு சுறுசுறுப்பாக வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள். அந்த அலைச்சல் முடிந்து இரவே வரவேற்பு நிகழ்வு வேறு நடக்கும். இதனால் சோர்வு படுத்தி எடுக்கும்.

முதலிரவு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஏற்கனவே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் என்றால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு நேரம் தேவை. எனவே பெரும்பாலான தம்பதிகள் உறவில் ஈடுபடுவதில்லையாம்.

போதை மணமகன்:
திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் தனது நண்பர்களுடன் குடித்துவிட்டு போதை தெளியாமல் இருப்பதும் ஒரு காரணமாம். போதையோடு இருக்கும் மணமகன் உறங்கி போய்விடுகிறாராம்.

மனஅழுத்தம்:

திருமணம் அல்லது ரிசப்சனில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டிருந்தால் அதனால் ஏற்பட்ட மன அழுத்தம், ஆகியவை முதலிரவு அன்று உறவில் ஈடுபடாமல் தவிர்த்து விடுகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

கட்டாய உறவு:

ஒருசில ஆண்கள் கட்டாயப்படுத்தி மனைவியிடம் உறவு கொள்வதாகவும், ஒருசிலர் மூன்றாவது அல்லது நான்காவது நாளில் உறவு வைத்து கொள்வதாகவும் இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

பெரும்பாலான திருமணங்களில் இப்படித் தான் நடக்கின்றதாம். முதல் நாள் தவற விட்டால் என்ன? … அடுத்து வரும் எல்லா நாட்களும் ஜாலிதானே! வாழ்கை வாழ்வதற்கே.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: