முதலிரவுக்கு பயந்து மணமகன் ஓட்டம்..! மணப்பெண் ஏமாற்றம்..!! இறுதியில் என்னாதான் முடிவு!

0
87

முதலிரவுக்கு பயந்து மணமகன் ஓட்டம்..! மணப்பெண் ஏமாற்றம்..!! இறுதியில் என்னாதான் முடிவு!
நெல்லை மாவட்டம் விகேபுரம் அருகே உள்ள செட்டிமேடு மெயின்ரோட்டை சேர்ந்தவர் ஜோசப். இவர் சென்டரிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும் வி.கே புரம் தாட்டம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்தை தொடர்ந்து அன்று மாலை மணமகன் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் திருமணத்திற்கான அனைத்து சடங்கு சம்பிரதாயங்களும் முடிந்த நிலையில் முதல் இரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அந்த நேரத்தில் மாப்பிள்ளையை தேடியபோது காணவில்லை. அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்போதுதான் அவர் மாயமானது தெரியவந்தது. அவர் காதலியுடன் ஓடி இருக்கலாம் என கருதப்படுகிறது.

இது குறித்து மமணமகள் வீட்டார் போலீசில் புகார் செய்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான மணமகனை தேடி வருகின்றனர். முதலிரவு அன்று மணமகன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: