முச்சக்கர வண்டிகளை நிறமாற்றம் செய்ய அரசு முடிவு

0
147

பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளுக்கு தனியான ஒரு நிறத்தை அறிமுகம் செய்ய வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்துள்ளது.

அவ்வாறு செய்வதன் ஊடாக வாடகை முச்சக்கர வண்டியை இலகுவாக அடையாளம் காண முடியும் என அந்த சபையின் தலைவர் சிசர கொதாகொட தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த போக்குவரத்து வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் நிறம் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தீர்மானம் மேற்கொள்ளப்பட்டவுடன் நிறம் மாற்றப்படும். இதற்கு மேலதிகமாக நிறம் மாற்றப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு இலட்சினை ஒன்றும் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் தற்போது 11 லட்சத்திற்கு அதிகமான முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 9 லட்ச முச்சக்கர வண்டிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: