மிஸ்டு கால் மூலம் ஏற்பட்ட காதலால் இறுதியில் இளம்பெண்ணிற்கு நடந்த கொடுமை!

0
140

எண்ணூரை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சங்கரின் மகள் சந்தியா . இவர் தனியார் கிளினிக் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் ரபீக் என்பவர் மிஸ்டு கால் மூலம் சந்தியாவுக்கு பழக்கம் ஆகியுள்ளார். பின்னர் இந்த பழக்கத்தால் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

ஆனால் இவர்களின் காதலுக்கு ரபீக் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் . இதனால் ரபீக் சந்தியாவுடன் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனையடுத்து சந்தியாவின் தாய் தனது மகள் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சந்தியா தனது திருமணம் பற்றி காதலன் ரபீக்கிடம் பேசியுள்ளார். அதற்கு ரபீக் பொலிசாக இருக்கும் தனது பெரியாப்பா நம் திருமணத்திற்கு உதவி செய்வார் என கூறியுள்ளார்.

பின்னர் இது பற்றி ரபீக்கின் பெரியாப்பா சந்தியாவிடம் பேசியுள்ளார். அப்போது சந்தியா ரபீக் இல்லாமல் என்னால் வாழ முடியாது என கண்ணீர் விட்டுள்ளார்.

பின்னர் சந்தியாவின் பெற்றோர்கள் தன் மகள் இருக்கும் இடத்தை அறிந்து அவரை அழைத்து சென்று ரபீக்கின் வீட்டில் தனது மகள் திருமணம் பற்றி பேசியுள்ளனர்.

ஆனால் ரபீக்கின் பெற்றோர்கள் திருமணத்திற்கு மறுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த சந்தியா ரபீக் தன்னை ஏமாற்றி விட்டதாக எண்ணி மண்ணெண்னையை ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார்.

அப்போது அருகில் இருந்தவர்கள் சதியாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சந்தியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: