மிருகத்தை விட மோசமாக நடத்தப்பட்ட அவலம்! 18 மாதங்களாக பாலியல் அடிமை!

0
131

பிரித்தானியாவில் இளம்பெண்ணை 18 மாதங்கள் பாலியல் அடிமையாக வைத்திருந்த தம்பதிக்கு மொத்தமாக 22 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் லிய்சிஸ்டர் நகரை சேர்ந்தவர் கெவின் வேரன் (27), இவர் மனைவி டொனா மோரிஸ் (35) . இவர்கள் இருபதுகளில் இருக்கும் இளம் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து மிருகத்தை விட மோசமாக நடத்தியுள்ளனர்.

பாலியல் அடிமையாக நடத்தப்பட்ட பெண்ணை கெவின் பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.

18 மாதங்கள் இப்படி கெவின் மற்றும் மோரிஸிடம் சிக்கி இளம் பெண் தவித்துள்ளார், இந்நிலையில் தனது தோழியை பாதிக்கப்பட்ட பெண் சந்தித்த நிலையில் இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்க தோழி வற்புறுத்தியுள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பொலிசில் புகார் அளிக்க பெண்ணை மீட்ட பொலிசார் கெவின் மற்ற மோரீஸை கைது செய்தார்கள்.

பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், என்னை மிருகத்தை விட மோசமாக நடத்தினார்கள், பலமுறை போராடி நான் ஓய்ந்துவிட்ட நிலையில் பொலிஸ் தயவால் மீட்கப்பட்டேன்.

அவர்களுக்கு என் நன்றி, பொலிஸ் உதவி இல்லாமல் தப்பித்திருப்பேன் என நினைக்கவில்லை என கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட தம்பதி மீது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கெவினுக்கு 18 ஆண்டுகள் மற்றும் மோரீஸுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: