மாப்பிள்ளை யார் தெரியுமா.!நடிகை ஸ்ரேயாவுக்கு திருமணம்.!

0
125

நடிகை ஸ்ரேயாவுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் தெரியுமா.!!
தமிழில் 2003-ம் ஆண்டு வெளிவந்த ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ரேயா .

அதன் பின்பு பல முன்னனி நடிகர்களுடன் நடித்த ஸ்ரேயா பல வெற்றி படங்களை கொடுத்து வந்தார்.தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோயினாக வலம் வந்த ஸ்ரேயாவுக்கு பின்னர் தமிழில் நடிக்கும் வாய்ப்பு குறைந்தது.

வைரல் வீடியோ!

இதனால் பின்னர் ஒரு சில தெலுங்கு படத்தில் நடித்தார். இந்நிலையில் நடிகை ஸ்ரேயாவுக்கும் அவரது ரஷ்ய காதலருக்கும் மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது.

இதற்காக ஸ்ரேயா தற்போது அவரது வருங்கால கணவர் குடும்பத்தாரைச் சந்திக்க ரஷ்யா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.நடிக்க வந்து 17 வருடங்கள் ஆகிவிட்டதால் ஸ்ரேயா திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக விரும்புகிறார் என்கிறார்கள்.

ஆனால், சமீபத்தில் கூட வயதானாலும் கூட தொடர்ந்து நடிப்பேன் எனத் தெரிவித்திருந்தார் ஸ்ரேயா.
திருமணம் தொடர்பான தகவலுக்கு ஸ்ரேயா மறுப்பு தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: