மாணவி துஷ்பிரயோகம்!! அதிபருக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

0
160

மாணவி துஷ்பிரயோகம்; அதிபருக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கருவப்பங்கேணியிலுள்ள பாடசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிபருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கருவப்பங்கேணி விபுலானந்தர் கல்லூரியில் கடந்த வருடம் ஆசிரியர் ஒருவரினால் மாணவியொருவர் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

மாணவி துஷ்பிரயோகம்
மாணவி துஷ்பிரயோகம்

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு கல்லூரி அதிபர் ஒத்துழைப்பு வழங்கியதாகக் கூறப்பட்டு, அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரும், அதிபரும் வலய கல்விப் பணிப்பாளரினால் இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.

அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னர், குறித்த கல்லூரிக்கு புதிய அதிபராக சாந்தகுமார் என்பவர் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அதிபர் சபேஷ்வரன் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மீண்டும் கருவப்பங்கேணி விபுலானந்தர் கல்லூரிக்கு அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மாணவி துஷ்பிரயோகம்
மாணவி துஷ்பிரயோகம்

இதனைக் கண்டித்து, பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புக்களின் அங்கத்தவர்கள் இணைந்து இன்று கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது பாடசாலை கல்வி நிர்வாகம் சீராக செயற்படுகின்ற நிலையில் மீண்டும் இவ்வாறான அதிபர்கள் கல்லூரிக்கு வருவதனால் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், மாணவர்களின் மனநிலையும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் இவ்வாறான அதிபர்கள் குறித்த கல்லூரிக்கு வருவதை பெற்றோர்களாகிய தாங்கள் எந்தவிதத்திலும் அனுமதிக்கப் போதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: