மாணவி தற்கொலை ஆசிரியரை கைது செய்ய முடியவில்லை!!

0
57

மாணவி தற்கொலை ஆசிரியரை கைது செய்ய முடியவில்லை!!

மொடக்குறிச்சி: பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், ஆசிரியையை கைது செய்ய முடியாமல், அரச்சலுார் போலீசார் திணறுகின்றனர்.ஈரோடு மாவட்டம், அரச்சலுாரை சேர்ந்த, சேகர் – கவுசல்யா தம்பதியின் மகள் தேவயானி, 18; அரச்சலுார் அரசு மேல்நிலைபள்ளியில் பிளஸ் 2 படித்தார். வேதியியல் ஆசிரியை செல்வலட்சுமி டார்ச்சர் தாங்க முடியாமல், தற்கொலை செய்து கொண்டார். அரச்சலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், ஆசிரியை தலைமறைவாகியுள்ளார்.ஆசிரியையை கைது செய்யக்கோரி, மாணவியின் உறவினர், அப்பகுதி மக்கள், 20ல் சாலைமறியல் செய்தனர். அப்போது, ௨௩ம் தேதிக்குள் கைது செய்வதாக, போலீசார் உறுதி தந்தனர். ஆனால், நேற்று மாலை வரை கைது செய்யவில்லை. இதனால், மாணவியின் பெற்றோர், உறவினர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:அரசியல் மற்றும் அதிகாரிகள் செல்வாக்கு உள்ளது; அதனால் தான் ஆசிரியையை கைது செய்வது தாமதமாகிறது. அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: