மாணவியுடன் ஆசிரியர் காதல்!! மனைவியிடம் வசமாக மாட்டினார்! பின்னர் நடந்தது தேரோட்டம்!!

0
146

மாணவியுடன் ஆசிரியர் காதல்!! மனைவியிடம் வசமாக மாட்டினார்! பின்னர் நடந்தது தேரோட்டம்!!

தனது ஆசிரியர் ஒருவருடன் வைபரில் தொடர்பு கொண்டிருந்த மாணவி ஒருவரால் இளம் ஆசிரியரின் குடும்பம் குலையும் நிலைக்கு வந்துள்ளது. அண்மையில் திருமணமான 30 வயதான ஆசிரியரே மனைவியால் விவாகரத்து செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

தனது கணவனுக்கு தொடர்ந்து வைபரில் சற்றிங் செய்து வருபவர் யார் என மனைவி தனது புலனாய்வின் மூலம் கண்டு பிடித்துள்ளார். குறித்த மாணவியின் வைபர் இலக்கத்தை மாணவன் ஒருவரின் பெயரிலும் அந்த மாணவனின் புகைப்படத்துடனுமே ஆசிரியர் தனது தொலைபேசியில் சேமித்து வைத்திருந்தார்.

ஆனால் குறித்த தொலைபேசி இலக்கத்தில் இருந்து வித்தியசமான முறையில் கரிசினைகளுடன் கூடிய தகவல்கள் ஆசிரியருக்கு அனுப்பப்படுவதை அவதானித்துள்ளார். அதன் பின்னர் அந்த வைபர் இலக்கத்தை தனது தங்கையிடம் கொடுத்து பரிசோதித்துள்ளார். அப்போது அந்த இலக்கத்தில் இருந்து பெண் ஒருவரின் குரலே கேட்டுள்ளது.

அதன் பின்னர் ஆசிரியரின் மனைவியின் தங்கை, இணையத்ததளத்தில் இருந்து பெற்ற சிங்கள மாணவன் ஒருவரின் புகைப்படத்துடன் கூடிய வைபர் இலக்கத்திலிருந்து, குறித்த மாணவிக்கு தொடர்ந்து காதலிப்பது போல் தகவல் அனுப்பியுள்ளார். இதனால் கடுப்புற்ற குறித்த மாணவி தனது தந்தையை கொண்டு எச்சரித்த போதே ஆசிரியரின் குட்டு மனைவிக்கும் மனைவியின் தங்கைக்கும் வெளிப்பட்டது.

அதன் பின்னர் ஆசிரியரின் வீடு ரணகளமானதாகவும் தற்போது மனைவியின் வீட்டிலிருந்து ஆசிரியர் பிரிந்து வெளியேறியுள்ளதாகவும் ஆசிரியரின் நண்பர்கள் மூலம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உரும்பிராய் பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆசிரியர் தீவகப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிப்பதாக ஆசிரியரின் நண்பர்களிடம் இருந்து தகவல்கள் வந்துள்ளன.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: