மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்த மதபோதகர்.!

0
194

மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்த மதபோதகர்.!
திருப்பத்தூர் ஜல்காம்பாறை எனும் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் தங்கி ப்ளஸ் 1 படித்து வந்தார்.

ஜலகாம்பாறை அருகே உள்ள மிட்டூர் கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதகராக இருப்பவர் 47 வயதுடைய தீபக் குமார்.

இந்நிலையில் அந்த மாணவி அடிக்கடி தேவாலயத்திற்கு சென்று வழிப்பட்ட போது தீபக் குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் நெருக்கமாக பழகிய அவர்கள் பல இடங்களில் ஒன்றாக சுற்றியுள்ளனர்.

பின்னர் இந்த பழக்கத்தால் அந்த மாணவியை சென்னைக்கு அழைத்து சென்ற தீபக் குமார் அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

பின்னர் இதனை நம்பிய அந்த மாணவியுடன் தீபக் குமார் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனையடுத்து அந்த மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தீபக் குமாரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு தீபக் மறுத்தோடு மட்டுமல்லாமல் இது பற்றி வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

பின்னர் தான் ஏமாற்றபட்டு விட்டோம் என்பதை உணர்ந்த அந்த மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பிறகு இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீபக் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: