மாணவிகளுக்கு முன் தமக்கு அடித்த ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்!

0
75

கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் மாணவர்களால் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்தது.

ஆறு மாணவர்களால் நையப்புடைக்கப்பட்ட ஆசிரியரின் தலையில் காயமேற்பட்டு, நான்கு தையலிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆசிரியர் மாணவர்களுடன் கண்டிப்பாக நடந்து கொள்பவர் என கூறப்படுகிறது. பெண் பிள்ளைகளின் முன்பாகவும் உயர்தர மாணவர்களை தண்டித்து வந்துள்ளார். இது பற்றி மாணவர்கள் தரப்பிலிருந்து குறிப்பிட்ட ஆசிரியருக்கு சில தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. என்றாலும், ஆசிரியர் தனது கண்டிப்பை நிறுத்தவில்லை.

சம்பவ தினத்தன்றும், மாணவர்களை ஆசிரியர் தண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களே,ஆசிரியரை நையப்புடைத்துள்ளனர்.

மாணவிகளுக்கு முன் தமக்கு அடித்த
மாணவிகளுக்கு முன் தமக்கு அடித்த
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: