இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற தம்பதி காரணம் என்ன தெரியுமா?

0
183

இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற தம்பதி காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து அமெரிக்காவிலுள்ள ஹில்ஸ்பரோ என்ற பகுதியிலுள்ள தனது மருமகளை ‘அறிவுறுத்த மற்றும் ஒழுங்குபடுத்த’ 67 வயதான ஐஸ்பிர் கல்சி மற்றும் 62 வயதான பூபிந்தர் தம்பதியினர் 13 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ததாக ஃபுளோரிடா காவல்துறை தெரிவித்துள்ளது.

தேவ்பீர், ஜஸ்பீர், பூபிந்தர் கல்சி (இடமிருந்து வலமாக) ஆகியோரது பாஸ்போர்ட்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சில்கி கைந்த் என்ற அந்த மருமகள் கடந்த சனிக்கிழமையன்று அடித்து காயப்படுத்தப்பட்ட நிலையில் அங்குள்ள போலீசாரால் கண்டெடுக்கப்பட்டார்.

தற்போது அவரின் மாமனார்-மாமியார் மற்றும் கணவர் மீது துன்புறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது மனைவியோடு கடந்த ஒரு மாதமாக அங்கிருந்த ஐஸ்பிர் கல்சி, தனது மருமகளை அத்துமீறி தொண்டையில் கத்தியை வைத்து மிரட்டியதாகவும் தெரிகிறது.

கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார்

33 வயதான கைந்தின் வீட்டை ஹில்ஸ்பரோ காவல்துறை அதிகாரிகள் வந்தடைவதற்கு சற்று முன்புதான் அவர் தாக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, தன்னையும் தனது ஒரு வயது குழந்தையையும் காக்க உதவுமாறு அதிகாரிகளை தொலைபேசி வாயிலாக கூறிய கைந்தின் அழைப்பின் பேரில் அவரின் வீட்டிற்கு வந்த அதிகாரிகளை அக்குடும்பத்தினர் தடுத்த நிலையில், போலிசார் தங்களுக்கு உதவ மேலதிகப் படைகளை கோர வேண்டியிருந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அங்குள்ள நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது வாக்குமூலம் அளித்த கைய்ந்த், 33 வயதான தனது கணவர், தான் கொலை செய்யப்படுவாமோ என்று அச்சப்படும் சூழலை உருவாக்கியதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.

மேலும், “இச்சம்பவம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் இரவு பேசிய அவர் நான் போலீசை தொடர்பு கொண்டால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதால் அச்சமடைந்தேன். அவர் என்னை கொன்றுவிடுவார் தெரியுமா? நான் போலீசை அழைத்து அவர்கள் பத்து நிமிடத்தில் வருவதற்குள்ளாகவே என்னை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்வேன்” என்று தனது கணவர் கூறியதாக கைய்ந்த் தெரிவித்ததாக பே நியூஸ் 9 என்ற உள்ளூர் தொலைக்காட்சி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் ஜஸ்பீர் கல்சி தன் மருமகளை கத்தியை காட்டி மிரட்டியதற்காக கடுமையான துன்புறுத்தல் பிரிவின் கீழும், அத்துமீறி செயல்பட்டதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக WFLA என்ற உள்ளூர் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அவர்கள் இருவரும் 911 அழைப்பதை தடுத்ததற்காகவும், குழந்தையிடம் அத்துமீறி நடந்ததற்காகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குடும்ப வன்முறை மற்றும் குழந்தையிடம் நடந்த அத்துமீறலை தடுக்க தவறியதற்காக பூபிந்தர் கல்சி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: