மரணத்துக்கு பின்னும் 5 ஆண்டுகள் கணவரை ஏமாற்றிய மனைவி! சுவாரஷ்யமான சம்பவம்!அப்படி என்னதான் நடந்தது!

0
359

தன் மனைவியின் இறப்புக்கு பின்பும் அவர் சொன்ன வார்த்தையை சுமார் 5 ஆண்டுகள் அவரின் காப்பாற்றிய கணவர் கடைசியில் ஏமாந்து போனார்.

தென் ஆப்ரிக்காவின் ஜோகானஸ்பர்க்கில் நிகில் பிட்டான் தனது மனைவி பிட்ரி பிட்டானுடன் வாழ்த்து வந்தார். பிட்ரி கடந்த 2013ல் தனது 69வது வயதில் உடல்நல பாதிப்பு குறைபாடு காரணமாக இறந்தார்.

இந்நிலையில் பிட்ரி இறக்கும் தருவாயில் தனது கணவர் நிகிலிடன் தான் இறந்த பின் வீட்டின் பாத்ரூமில் உள்ள செடிக்கு தொடர்ந்து தண்ணீர் ஊற்றும்படி கேட்டுக்கொண்டார்.

இதை சுமார் ஐந்து ஆண்டுகளாக நிகில் தொடர்ந்து செய்து வந்துள்ளார். இந்நிலையில் லண்டனில் பணியாற்றி வந்த இவர்களின் மகள் அண்டோனியா நிகோல், நிகில் பணி ஓய்வு பெற்ற பின் வீட்டை காலி செய்வதில் நிகிலுக்கு உதவ ஜோகானஸ்பர்க் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது தான் நிகில் பிளாஸ்டிக் செடிக்கு சுமார் 5 ஆண்டுகள் தொடர்ந்து தண்ணீர் ஊற்றிய விஷயம் தெரியவந்தது. இந்த கதையை கடந்த ஜனவரி மாதம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து நிகோல் கூறுகையில்,’ நான் எனது தந்தைக்கு உதவ நேரடியாக சென்றேன். அங்கு அவர் தொடர்ந்து பிளாஸ்டிக் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை பார்த்தேன். இன்னும் என் தாய் என்னுடன் இருப்பதாக தற்போது உணர்கிறேன்.’ என்றார்.

இதுகுறித்து நிகில் கூறுகையில், ‘நான் பல நாட்கள் தண்ணீர் ஊற்றும் போது இன்னும் இது புதுசாகவே இருக்கே என ஆச்சரியப்பட்டுள்ளேன்’ என்றார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: