மரக்கறி அரிந்து கொண்டிருந்த பெண் திடீரென கிழே விழுந்து உயிரிழந்தார்!

0
76

மரக்கறி அரிந்து கொண்டிருந்த பெண் திடீரென கிழே விழுந்து உயிரிழந்தார்!

நாவலபிட்டி சொய்சாகல பகுதியில் வீடு ஒன்றில் மரக்கறி அரிந்து கொண்டிருந்த குடும்ப பெண் திடீரென கிழே விழுந்த நிலையில் உயரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது….

நாவலபிட்டி சொய்சாகல பகுதியில் வீடு ஒன்றில் மரக்கறி அரிந்து கொண்டிருந்த குடும்ப பெண் திடீரென கிழே விழுந்துள்ளார்.

கிழே விழுந்த குறித்த பெண்ணை உறவினர்கள் வைத்திசாலைக்கு கொண்டு செல்லும் போது வழியில் உயிர் இழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டியை சேர்ந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான பழனியாண்டி நிர்மலா என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கபட உள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: