மம்மிகளின் கள்ளக்காதல் தொடர்பு ஆய்வில் அம்பலமான உண்மை!சுவாரஸ்யம்!

0
474

எகிப்தில் உயர்குடியில் பிறந்தவர்கள் இறந்தால், அவர்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு அடக்கம் செய்யப்படுவது வழக்கம்.

இவை மம்மி என அழைக்கப்படுகிறது, இந்த மம்மிக்களை வைத்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள டேர் ரிபே கிராமத்தில் கடந்த 1907ம் ஆண்டு இரு மம்மிகள் அருகருகே கண்டுபிடிக்கப்பட்டன.

இரண்டும் உள்ளூர் ஆளுநரின் மகன்கள் நம்-நக்த், நக்த்-ஆங் என தெரியவந்த நிலையில், சுமார் 3,800 ஆண்டுகளான இந்த மம்மிகள் ஆய்வுக்காக பிரித்தானியாவின் மான்செஸ்டர் பல்கலைக்கழக அருங்காட்சியகத்துக்கு எடுத்து வரப்பட்டன.

இரு மம்மிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா என்பதை உறுதி செய்ய டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது.

இரு உடல்களிலும் எம்1ஏ1 எனப்படும் மைட்டோகான்டிரியல் ஹேப்லோடைப் மரபணுக்கள் ஒரே மாதிரியாக இருந்தன.

இதன்மூலம், இருவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்பது உறுதியானது. ஆனால், தந்தை வழியாக வரும் ஒய் குரோமோசோம் மரபணு தொடரில் வேறுபாடுகள் இருந்தன.

இதையடுத்து இருவரும் வேறு, வேறு தந்தைக்கு பிறந்தவர்கள் என அறியப்பட்டது.

இதனால் நம்-நக்த், நக்த்-ஆங் ஆகியோரின் தாய்க்கு கள்ளத்தொடர்பு இருந்திருக்கலாம் என்பது இந்த சோதனையின் மூலம் உலகுக்கு தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்க பயன் பெறுவீர்கள்!

உங்கள் நரைமுடியை கருகருவென மாற்றும் அரிய மூலிகை…. அதிகம் பகிருங்கள்.

தலைமுடி உதிர்வதும் நிறம் மாறி நரைப்பதுமே, இன்றைய இளைய வயதினரின் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. இளம் வயதிலேயே, இயல்பான முடியின் கரு நிறம் மாறி செம்பட்டையாகி, முழுதும் நரைத்து விடுகிறது.

இதற்கு ஒரு சிறந்த வழி உண்டு. தொடர்ந்தும் படியுங்கள்…

நவீன கால வளர்ச்சிகளில், குளிக்கும்போது தலையில் தேய்த்தவுடன் ஏற்படும் நுரையில், தலையில் உள்ள பொடுகுகள் போன்ற தலை பாதிப்புகள் விலக பலவகைப்பட்ட ஷாம்பூக்கள் உபயோகிப்பதால், விருப்பமில்லாத எண்ணைக் குளியலை இன்றைய தலைமுறையினர் முற்றிலும் புறக்கணித்து விட்டனர்.

எண்ணைக் குளியலை, இன்று வீட்டில் உள்ள பெரியோர் வற்புறுத்தினாலும் யாரும் அதை பொருட்படுத்தாமல், அதெல்லாம் உன் காலம், என கேலி செய்யும் காலமாகிவிட்டது, இக்காலம்.

தலைமுடி நரைக்க எண்ணைக் குளியலை விட்டது ஒரு காரணம் என்றால், புரதச் சத்து இல்லாத துரித உணவுகள் மற்றொரு காரணமாகி விட்டன. கெமிக்கல் நிறைந்த நொறுக்குத் தீனிகள் மற்றும் பாக்கெட் தின்பண்டங்களும் அடக்கம்.

முடியை கறுக்க வைக்கும் அரிய மூலிகை..

தலைமுடிகள் நரைத்து இருப்பதைக் கட்டுப்படுத்தி, தலைமுடிகளின் வேர்க் கால்களில் உள்ள அணுக்களின் பாதிப்பை சீராக்கி, மீண்டும் மெலனின் உற்பத்தியை அதிகரிக்க வைத்து, தலைமுடியை கறுக்க வைக்கும் ஒரு அரிய மூலிகைதான், கரும்பூலா.

கரும்பூலா செடிகளின் இலைகள் மற்றும் கனிகளில் உள்ள வேதிப்பொருட்கள், நரைப்பதற்கு காரணமான மெலனின் பாதிப்பை சரியாக்கி, தலைமுடிகளை கருப்பாக்குகின்றன.

கரும்பூலா, அவுரி, மருதோன்றி, கறிவேப்பிலை இலைகளை தனித்தனியே இடித்து சாறெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன் கரும்பூலா பழங்கள் மற்றும் நெல்லிக்காயை கொட்டைகள் நீக்கி, சதைப் பகுதிகளை சேகரித்து வைத்துக் கொண்டு, சிறிது தேங்காய் எண்ணையில் இவற்றையும், இலைகளின் சாற்றையும் கலந்து, அத்துடன் கடுக்காய் சூரணத்தை சிறிதளவு சேர்த்து, ஒரு மண் சட்டியில் இட்டு, வாயை ஒரு வெள்ளைத் துணியால் நன்கு சுற்றி, சூரிய ஒளியில் படுமாறு தினமும் வைக்க வேண்டும்.

இதுபோல ஓரிரு வாரங்கள் வைத்திருந்து, பின்னர் இந்த எண்ணையை வடித்து ஒரு பாட்டிலில் வைத்துக்கொண்டு, தலையில் தேய்த்து நன்கு ஊற வைத்து, அதன்பின் தலையை சிகைக்காய் கொண்டு அலசி குளித்துவர, நரை விலகி, தலைமுடி விரைவில் கருப்பாக மாற ஆரம்பிக்கும். முடி உதிர்வு கட்டுப்படும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: