மனைவி முந்தானையில் நாவற்பழம் பறித்தவர் பொலிசாரால் கைது!!

0
93

மனைவி முந்தானையில் நாவற்பழம் பறித்தவர் பொலிசாரால் கைது!!

அம்­பாறை பக்­கி­யல்ல பொலிஸ் பிரி­வி­லுள்ள 39 ஆம் கட்டையில் வீதி­யோரம் காணப்­பட்ட நாவல் மரத்தில் நாவற்­பழம் பறித்த ஒரு­வ­ருக்கு பத்­தா­யிரம் ரூபா அப­ராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்­பாக தெரிய வரு­வ­தா­வது, மட்­டக்­க­ளப்பு களு­வாஞ்­சி­க்கு­டியைச் சேர்ந்த கண­வனும் மனை­வியும் அம்­பா­றைக்கு திரு­மண வீடொன்­றுக்கு கடந்த 30 ஆம் திகதி மோட்டார் சைக்­கிளில் சென்று வீடு திரும்பிக் கொண்­டி­ருக்­கையில் பக்­கி­யல்ல பொலிஸ் பிரி­வி­லுள்ள 39ஆம் கட்­டையில் வைத்து வீதி­யோரம் ஒரு வெற்றுக் காணியில் காணப்­பட்ட நாவல் மரத்தில் நாவற்­பழம் பறித்­துள்­ளனர்.

மனைவி தனது புடவையின் முந்தா­னையை பிடிக்க கணவன் அந்த நாவல் மரத்தில் காணப்பட்ட நாவற்பழத்­தினை பறித்­துள்ளார்.

நாவற்ப­ழங்கள் முந்­தா­னைக்குள் விழுந்து கொண்­டி­ருந்த போது அங்கு திடீ­ரென வந்த பக்­கி­யல்ல பொலிஸார் இந்த காணியில் நாவற்­பழம் பறிக்க முடி­யாது எனவும் நாவற்­பழம் பறித்தது சட்ட விரோதம் எனவும் கூறி கணவனை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இத­னைய­டுத்து பக்­கி­யல்ல பொலிஸ் நிலை­யத்­திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கணவர் பின்னர் பிணையில் விடு­தலை செய்­யப்பட்டார்.

இது தொடர்­பான வழக்கு கடந்த 10 ஆம் திகதி அம்­பாறை நீதிவான் நீதி­மன்­றத்தில் எடுத்துக் கொள்­ளப்­பட்ட போது சட்ட விரோ­த­மாக அக்­கா­ணியில் நாவற்­பழம் பறித்­த­மைக்­காக பத்­தா­யிரம் ரூபா அப­ராதம் செலுத்­து­மாறு அம்­பாறை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் உத்­தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: