மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் தூக்குப்போட்டு கணவன் பலி!

0
101

மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் தூக்குப்போட்டு கணவன் பலி!

மும்பை சயான் கோலிவாடா எம்.ஏ. சாலை குடிசை பகுதியில் வசித்து வந்தவர் கிருஷ்ணா(வயது21). இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர். இவரது மனைவி தனலட்சுமி(19). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

குடும்ப பிரச்சினை காரணமாக கணவர், மனைவி இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். கடந்த 21-ந்தேதி வழக்கம் போல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் போது, தனலட்சுமி கோபித்து கொண்டு அருகில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனால் கிருஷ்ணா மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். இந்தநிலையில், நேற்று காலை 10 மணியளவில் அவரது அண்ணன் வீட்டிற்கு வந்தார்.

அப்போது கிருஷ்ணாவின் வீட்டு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெகுநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது வீட்டிற்குள் கிருஷ்ணா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தம்பியின் உடலை பார்த்து கதறி அழுதார்.

சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அண்டாப்ஹில் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: