மனைவியை வேவு பார்த்த கணவனுக்கு மனைவி அளித்த அதிர்ச்சி வைத்தியம்…!

0
103

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்தவர் சீன் டோனிஸ் (37). இவரது மனைவி நோன்சி டோனிஷ். இவர் தனது மகனின் ஐபேடை எடுத்து கொண்டு வெளியில் சென்றுள்ளார். இதனை அறியாத கணவர் ஐபேடை தேடியபோது கிடைக்கவில்லை.

எனவே தனது ஆப்பிள் போனின் உதவியுடன் ஐபேடை தேடி உள்ளார். அதில் கிடைத்த சிக்னலை வைத்து பின் தொடர்ந்து சென்றார்.அந்த சிக்னல் ஒரு வீட்டின் வாசலில் நின்றது. அந்த வீட்டினுள் பார்த்தபோது தனது மனைவி வேறொருவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனை வீடியோவாக எடுத்து உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நோன்சி தனது கணவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.இது குறித்து நோன்சியின் வக்கீல் கூறும்போது, நோன்சி கணவரை பிரிந்து விட்டதாக நினைத்து அவருடன் அவருடைய முதலாளி தொடர்பில் இருந்தார். அவரது தனிப்பட்ட விஷயங்களை செல்போனில் படம் பிடித்தது தவறு என்று கூறினார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வரும் பட்சத்தில் சீன் டோனிசுக்கு 15 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: