மனைவியை உறையும் பனியில் அரை நிர்வாணமாக தெருவில் நடக்க வைத்த கணவன்!

0
140

அமெரிக்காவில் மனைவியை அரைநிர்வாணமாக தெருவில் நடக்க வைத்த கணவனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் Harlem பகுதியில் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் Jasson Melo(26) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது மனைவியின் போனுக்கு குறுந்தகவல்கள் தொடர்ந்து வந்துள்ளது. இதனால் சந்தேகப்பட்ட அவர் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வாக்குவாதம் முற்ற Jasson Melo அடுக்கு மாடி குடியிருப்பு என்று கூட பார்க்காமல், தனது மனைவியை அரை நிர்வாணமாக்கி உறையும் பனியில் தெருவில் நடக்க வைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் போட்டு பணம் சம்பாதிக்க முற்பட்டதுடன், மனைவியின் உறவினர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த வேளையில், நீதிபதி Jasson Melo-வுக்கு 7 ஆண்டுகளுக்கு சிறைதண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் Jasson Melo-ன் மனைவி நீதிமன்றத்திற்கு வரவில்லை, இருப்பினும் அவர் ஒரு கடிதம் ஒன்றை தன்னுடைய வழக்கறிஞரிடம் எழுதி கொடுத்துள்ளார். அதில் Jasson Melo-வின் செயல் விவரிக்க முடியாத பெரும் துயரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மனைவியை அரை நிர்வாணமாக தெருவில் நடக்க வைத்த கணவன்!
மனைவியை அரை நிர்வாணமாக தெருவில் நடக்க வைத்த கணவன்!
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: