மனைவியுடனான ஆபாச வீடியோவை செல்போனில் வைத்திருந்த கணவன்.!ஏற்பட்ட விபரீதம்.!

0
121

மனைவியுடனான ஆபாச வீடியோவை செல்போனில் வைத்திருந்த கணவன்.! பிறகு வாலிபரால் தம்பதிக்கு ஏற்பட்ட விபரீதம்.!
தானே மாவட்டத்தை சேர்ந்தவர் அவினாஷ் ஷிண்டே . இவர் செல்போன்களை பழுது பார்க்கும் கடைக்கும் வைத்துள்ளார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்தவர் ஒருவரின் விலை உயர்ந்த மொபைல் போன் பழுதாகியுள்ளது .

பின்னர் அந்த நபர் தன் மொபைல் போனை அவினாஷ் ஷிண்டேவிடம் பழுது பார்க்க கொடுத்துள்ளார்.

அப்போது செல்போனை பழுது பார்த்து மொபைல் போனை ஆன் செய்து பார்க்கும் போது செல்போனை கொடுத்தவர் தனது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ இருப்பதை அவினாஷ் ஷிண்டே பார்த்துள்ளார்.

பின்னர் இதை அவினாஷ் ஷிண்டே தனது நண்பர்களுக்கு காண்பித்து பணம் பறிக்க திட்ட மிட்டுள்ளார்.

இதனையடுத்து 3 வாலிபர்கள் சேர்ந்து அந்த தம்பதிக்கு போன் செய்து நீங்கள் உல்லாசமாக இருக்கும் வீடியோ எங்களிடம் இருப்பதாக கூறியுள்ளனர் .

மேலும் உங்கள் படத்தை இணையத்தளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்

பின்னர் இது தொடர்பாக அந்த தம்பதி போலீசாரின் உதவியை நாடிய போது போலீசார் உங்களுக்கு பணம் கொடுக்கிறோம் என அந்த நபர்களிடம் கூற வைத்துள்ளனர்.

அப்போது இதனை நம்பி அந்த வாலிபர்கள் வந்த போது போலீசார்கள் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் இருந்த ஆபாச வீடியோவை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: