மனைவிக்கே தெரியாமல் விவாகரத்து பெற்ற கணவர். பத்திரிகை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி!

0
76

மனைவிக்கே தெரியாமல் விவாகரத்து பெற்ற கணவர். பத்திரிகை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி!

ஐதராபாத்தை சேர்ந்த சபா கவுசர் என்ற 24 வயது இளம்பெண்ணின் கணவர் முகமது மனாசுதீன் லண்டனில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்கு பிறகு தன்னையும் லண்டன் அழைத்துச்செல்வதாக கூறி திருமணம் செய்த முகமது, பின்னர் திருமணம் முடிந்து அவர் மட்டும் லண்டன் சென்றுள்ளார்.

அதன் பிறகு இரண்டு முறை மட்டுமே இந்தியா திரும்பிய அவர் , கடந்த ஜூலை வரை மட்டும் தனது மனைவி சபா கவுசருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதன் பிறகு அவர் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், முகமது ஐதரபாத்தை சேர்ந்த இஸ்லாமிய மத குரு மூலமாக மனைவிக்கே தெரியாமல் அவரை விவாகரத்து செய்து விட்டதாக செய்திதாளில் விளம்பரம் செய்துள்ளார்.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த சபா கவுசர் போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அவரின் கணவர் முகமது, இஸ்லாமிய மத குரு, கணவரின் சகோதரிகள் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக சபா கூறும்போது:-

அனைவர் முன்னிலையிலும் திருமணம் செய்து விட்டு தற்போது எனக்கு தெரியாமல் விவாகரத்து செய்துள்ளதாகவும், விவாகரத்து கொடுப்பதாக இருந்தால் திருமணம் செய்துவைத்த பெரியோர்கள் முன்னிலையில் கொடுக்கட்டும் என்றும் கூறினார்.

இஸ்லாமிய காசி மதகுருக்கள் சிலர் இதே போல தொடர்ந்து பல சட்டவிரோதமாக குழந்தை திருமணம் ஆகியவற்றிலும் ஈடுபடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: