மனைவிக்கு இவ்வளவு பயமா? பெண் வேடத்திற்கு இதுவும் காரணம்…

0
70

மனைவிக்கு இவ்வளவு பயமா? பெண் வேடத்திற்கு இதுவும் காரணம்…

இந்த பெண் வேடத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் ரகசியம் தெரியுமா?… மனைவிக்கு இவ்வளவு பயமா?

சின்னத்திரையில் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர்கள் இரண்டு பேர். ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணன். மற்றொருவர் மதுரை ராமர்.

இதில் மதுரை ராமர் பெண் வேடம் போட்டு சொன்ன பின்னர்தான் இந்த வார்த்தையே பிரபலமானது.

மதுரை ராமர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அமுதவானனுடன் சேர்ந்து டைட்டிலை வென்றவர். அதன்பிறகு சில வருடம் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. பின்னர் சிரிச்சா போச்சு மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

அதில் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மதுரை ராமரை பெண் வேடம் போட கூறியுள்ளார்.

ஆனால் அவர் தனது மனைவிக்கு பெண் வேடம் போடுவது பிடிக்காது என்பதால் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

ஆனால் சிரிச்சா போச்சு இயக்குனர் கண்டிப்புடன் அவர்தான் அந்த பெண் வேடத்தை போட வேண்டும் என்று உறுதியாக கூறியுள்ளார்.

அதன்பின்பு வேறு வழியில்லாமல் பெண் வேடம் போட்டு நடித்தார். அந்த வேடம் செம ஹிட் அடித்தது. அவருக்கு பெரிய புகழையும் பெற்று கொடுத்தது.

மேலும் மதுரை ராமர் இயக்குனரிடம் சென்று மன்னிப்பு கேட்டாராம். நான் மட்டும் இந்த வாய்ப்பை மறுத்து இருந்தால் இந்த அளவுக்கு பிரபலம் ஆகி இருக்க முடியாது என்று நன்றி கூறினாராம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: