மனிதன் தலையில் கூட தனது தேங்காயை விழாது பார்த்துக்கொள்ளும் தென்னை மரத்துக்கே இந்த நிலை என்றால்.

0
80

மனிதன் தலையில் கூட தனது தேங்காயை விழாது பார்த்துக்கொள்ளும் தென்னை மரத்துக்கே இந்த நிலை என்றால்.

விசமிகளின் கீழ்த்தரமான செயல்

வேலணை பிரதேசத்தில் தனி நபர் ஒருவருக்கு சொந்தமான காணியில் நாட்டப்பட்டிருந்த 30 இளம் தென்னை மரங்களின் வட்டு பகுதிக்குள் இனந்தெரியாத விஷமிகள் மண்ணெண்ணை ஊற்றி மரங்களை கொலை செய்த சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.

குறித்த சம்பவம் சூரன்போர் தினத்தன்று இரவு நடைபெற்றுள்ளது.

” தாள் உண்ட நீரை தலையாலே தான் தரும் பிள்ளை ” என்பதற்கமைய மனிதனுக்க பல வகையிலும் வாழ்வாதார நன்மைகளை தந்தவரும் முப்பது இளம் தென்னம் மரங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொடுமையாக கருக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

மனிதன் தலையில் கூட தனது தேங்காயை விழாது பார்த்துக்கொள்ளும் தென்னை மரத்துக்கே இந்த கொடுமையை விஷமிகள் செய்துள்ளனர்.

நாட்டில் தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபாவையும் தாண்டியுள்ள நிலையில் இவ்வாறான விஷமச் செயல்களால் பாதிக்கப்படுவது குறித்த செயலைச் செய்தவர்களுமே என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: