மதுவிற்கு அடிமையான நடிகை சாவித்திரி எப்படி இறந்தார் தெரியுமா?

0
115

ஒரு காலத்தில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆருக்கு நிகராக புகழை பெற்றிருந்தவர் தான் சாவித்ரி. பல நடிகைகளுக்கு இணையாக சம்பாதித்த இவர் ஊட்டி, கொடைக்கானல், சென்னை என இடங்களில் பல மாளிகையும் வாங்கினார்.

பல ஸ்டூடியோக்களுக்கு முதலாளியாக இருந்த இவர் நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் எதிரும், புதிரும் குணம் கொண்டவர்கள் ஆவர். காரணம் தன்னை யாரும் அடக்கி ஆளக்கூடாது என்பவரே சாவித்ரி. அதே நேரம் தனக்கு அனைவரும் கட்டுப்பட்டு தான் இருக்க வேண்டும் என்பவர் தான் ஜெமினி கணேசன்.

இதுதான் இவர்கள் இருவருக்கும் விரிசலை ஏற்படுத்தியது. மேலும் கணவனின் பேச்சை மீறி படங்கள் எடுத்து தோல்வியடைந்து நஷ்டமுமடைந்தார்.

இதனால் சொத்துகளை இழந்து, குடிக்கு அடிமையாகி அண்ணாநகரில் ஒரு சிறிய வீட்டில் வாடகைக்கு குடியேறினார்.

கடைசியில் குடி இல்லாமல் தன்னால் இருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, ஒருநாள் சுயநினைவின்றி ரோட்டில் படுத்து கிடந்துள்ளார்.

பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் கோமாவில் இருந்து 1981ம் ஆண்டு உயிரிழந்தார்.

செல்வ செழிப்பில் வசித்தவர் கடைசியில் செலவுக்கு கூட பணமின்றி வாடகை வீட்டில் உயிரிழந்தார். இவரது வாழ்க்கை மற்றவர்களுக்கு ஓர் உதாரணம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: