மகாவிஷ்ணுவுக்கு உகந்த தமிழ் மாதம் மார்கழியின் 12 ராசிகளுக்குமான‌ பலன்கள்!

0
365

மகாவிஷ்ணுவுக்கு உகந்த தமிழ் மாதம் மார்கழியின் 12 ராசிகளுக்குமான‌ பலன்கள்!

மாதங்களில் நான் மார்கழி’ என்று கீதையில் கண்ணன் சொன்னது பக்தி மார்க்கத்தால் என்னை அடைய முடியும் என்பதை சுட்டிக்காட்டவே என்பதை நாம் உணர வேணடியது அவசியம்.

மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தனுசு ராசிக்கு அதிபதி குருபகவான். அதாவது, குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது.

நவகிரகங்களில் அரசன் ஆகிய சூரியன், குருகுலவாசம் செய்யும் நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள் உட்பட சத்திரியர்கள் யாரும் போர்த் தொழிலில் ஈடுபட மாட்டார்கள். பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபட வேண்டிய காலமாக மார்கழியைக் கொண்டிருந்தார்கள் நம் முன்னோர்கள்.

நமது சொந்தக் காரியங்களை யெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த ஒரு மாதமாவது இறைவனின் மேல் நமது முழு சிந்தனையையும் செலுத்த வேண்டும் என்ற காரணத்தினால்தான் மார்கழியில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகளைத் தவிர்த்தார்கள் நம் முன்னோர்கள்.

பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும் மாதமாக மார்கழியைக் கருதினார்கள். வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதம் இது. 12 ராசிகளுக்கும் மார்கழி மாத ராசி பலனை அறிந்து கொள்வோம்.

கிரகங்களின் ராசி மாற்றம்
கிரகங்களின் ராசி மாற்றம்
சூரியன் – ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் – ராசி மாற்றம் இல்லை
புதன் – 22ம் தேதி தனுசு ராசிக்கு மாறுகிறார்
குரு – ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் – 05ம் தேதி தனுசு ராசிக்கும் 29ம் தேதி மகரம் ராசிக்கும் மாறுகிறார்
சனி – ராசி மாற்றம் இல்லை
ராகு – ராசி மாற்றம் இல்லை
கேது – ராசி மாற்றம் இல்லை

மேஷம்
சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு வாங்கி விற்கும் தொழில் சிறப்படையும், சகோதரர்களால் நன்மை உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் மனசங்கடம் உண்டாகும் 22ம் தேதிக்குப் பின்னர் உயர் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அனைவரிடமும் நல்லுறவு உண்டாகும், பணப் புழக்கம் மிகவும் தாராளமாக இருக்கும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்லவும், 05ம் தேதிக்குப் பின்னர் பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும், பிதுரார்ஜித சொத்திலிருந்து பங்கு கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனங்களை பராமரிக்கும் நிலை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.

ரிஷபம்
சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளால் மனக் கஷ்டம் உண்டாகும், உத்தியோகத்தில் கவனம் தேவை.. செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் முதலீடுகளை தவிர்க்கவும், நெருப்பினால் காயம் உண்டாகலாம். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும், 22ம் தேதிக்குப் பின்னர் படிப்பில் கவனம் தேவை. குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் மனக் கஷ்டம் உண்டாகும், பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள், 05ம் தேதிக்குப் பின்னர் பெண்களால் தொல்லை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும், மனதில் பாரம் அதிகரிக்கும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்துவீட்டுக்காரர்களால் தொல்லை உண்டாகலாம். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குலதெய்வக் கோயிலுக்குச் செல்வீர்கள்.

மிதுனம்
சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்கள் எளிதில் நிறைவேறும், அரசு அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் உண்டாகும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்திலிருந்து பங்கு கிடைக்கும், சகோதரர்களுடன் நல்லுறவு நிலவும். உங்கள் ராசிநாதன் புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் உழைப்பு அதிகரிக்கும், 22ம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்களாக வெளியில் பாக்கியிருந்த பணம் வசூலாகும், கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும், 05ம் தேதிக்குப் பின்னர் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும்.. சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும், தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீரென்று பண வரவு உண்டாகும்.

கடகம்
கடகம்
சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம், கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வாங்குவீர்கள், தொழிலுக்காக வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார். ஷேர் மார்க்கெட் தொழில் சிறப்படையும், 22ம் தேதி முதல் வியாபாரத்தில் கவனம் தேவை.. குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும், படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும், 05ம் தேதிக்குப் பின்னர் நகைகளை அடகு வைக்க வேண்டியிருக்கலாம். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சச்சரவைத் தவிர்க்கவும், மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும்.

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கத்திலிருந்து பரிசுப் கிடைக்கும், தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.. செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும், வீடு மாறும் நிலை உண்டாகும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் நன்றாகப் படிப்பீர்கள், 22ம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு நிலவும், அக்கம் பக்கத்தரின் உதவி கிடைக்கும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டுக்கு ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள் 05ம் தேதிக்குப் பின்னர் உல்லாசப் பயணம் செல்வீர்கள். . சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும், உறவினர்களின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பொருளாதர விஷயங்களில் கவனம் தேவை.

கன்னி
சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீட்டு மனை ஒதுக்கீட்டு கிடைக்கும், புதிதாக வாங்குவீர்கள். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு மூலம் வருமானம் அதிகரிக்கும், காவல் துறையினருக்கு சம்பளம் அதிகரிக்கும்.. உங்கள் ராசிநாதன் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும், 22ம் தேதிக்கு பிறகு கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் இனிமை அதிகரிக்கும், பொருளாதார நிலை சிறப்படையும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும், 05ம் தேத்க்குப் பின்னர் வீட்டை அழகுபடுத்துவீர்கள். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, உழைப்பு அதிகரிக்கும். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பயணம் செல்வீர்கள்.

துலாம்
சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கப் பணியாளர்களுக்கு இடமாற்றம் உண்டாகும், அலுவலகத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கோபம் அதிகரிக்கும், உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும், 22ம் தேதிக்குப் பின்னர் எண்ணங்கள் நிறைவேறும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும், சமுதாயத்தில் மரியாதை உயரும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பொன் நகைகளை வாங்குவீர்கள், 05ம் தேதிக்குப் பின்னர் வீடு மாறும் நிலை உண்டாகும்.. சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும், உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

விருச்சிகம்
சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சம்பளம் அதிகரிக்கும், பேச்சில் அதிகாரத் தொனி உண்டாகும்.. உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும், வீண் அலைச்சல் உண்டாகும்.. புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சிந்தனையில் தடுமாற்றம் உண்டாகும், 22ம் தேதிக்குப் பின்னர் குடும்பத்தில் குழப்ப்ம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளுக்கு மருத்துவச் செலவு உண்டாகும், நகைகளை விற்கும் நிலை வரும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தேவையில்லாமல் மேக்கப் பொருட்களை வாங்குவீர்கள், 05ம் தேதிக்குப் பின்னர் வாழ்க்கைத்துணையின் உதவி கிடைக்கும்.. சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்றா வீண் பேச்சை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவினால் தொல்லை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் புத்தியில் குழப்பம் உண்டாகும்.

தனுசு
சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும், அப்பாவினால் நன்மை உண்டாகும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் சம்பளம் அதிகரிக்கும், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.. புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகளில் கவனம் தேவை, 22ம் தேதிக்குப் பின்னர் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும், எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பொன்னகைகளில் முதலீடுகள் அதிகரிக்கும், 05ம் தேதிக்குப் பின்னர் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும், கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் பண வரவு உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

மகரம்

சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க நிறுவனங்களில் முதலீடுகள் செய்ய வேண்டியிருக்கும், எல்லா கட்டணங்களையும் செலுத்திவிடுவது நல்லது. செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் மருத்துவத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், முயற்சிகள் வெற்றியடையும் புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் தொழிலில் லாபம் உண்டாகும், 22ம் தேதிக்குப் பின்னர் வியாபாரத்திற்க்காக கடன் வாங்கும் நிலை உண்டாகும். . குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும், ஆசிரியர் வேலைக்கு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.. சுக்கிரன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவியால் நன்மை உண்டாகும், 05ம் தேதிக்குப் பின்னர் ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்காக செலவுகள் அதிகரிக்கும், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

கும்பம்
சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும், எல்லா செயல்களும் வெற்றியடையும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும், முருகனின் அருள் கிடைக்கும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் ஒப்பந்தத் தொழில் சிறப்படையும், 22ம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் வியாபாரம் லாபத்தைத் தரும். . குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும், குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் அடையும், 05ம் தேதிக்குப் பிறகு செயல்கள் சிறப்படையும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்கள் ஆசைகள் நிறைவேறும், தொழில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளின் பணம் கிடைக்கும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில்களுக்காக செலவுகள் அதிகரிக்கும்.

மீனம்
சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும், பெரியவர்களின் உதவி கிடைக்கும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை, நெருப்ப சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. . புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர்கல்வியில் மேன்மை நிலை உண்டாகும், 22ம் தேதிக்குப் பின்னர் காரியங்களில் வெற்றி உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை, குழந்தைகளினால் மனக் கஷ்டம் உண்டாகும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் அனுக்கிரகம் கிடைக்கும். 05ம் தேதிக்குப் பின்னர் முயற்சிகளெல்லாம் வெற்றியடையும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் சிறப்ப்டையும், செயல்கள் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும், கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: