மகளுடன் கள்ளதொடர்பு போலீஸ் அதிகாரியை செருப்பால் அடித்த தயார்

0
89

மகளுடன் கள்ளதொடர்பு போலீஸ் அதிகாரியை செருப்பால் அடித்த தயார்

தெலுங்கானா மாநிலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ஏ.எஸ்.பியாக பணிபுரிந்து வருபவர் சுனிதா ரெட்டி. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனியே வசித்து வந்துள்ளார். கணவன் மனைவி இருவருக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ஐதரபாத் கல்வகுர்த்தி பகுதியில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் மல்லிகார்ஜூனாவுடன் சுனிதா ரெட்டிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சுனிதாவின் கணவர் சுரேந்தர் ரெட்டி பலமுறை கண்டித்தும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில், அவர்கள் இருவரும் ஒன்றாக வீட்டில் இருந்த போது, உறவினர்களுடன் அங்கே வந்த சுரேந்தர் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தார். அப்போது ஏற்பட்ட களோபரத்தில் சுனிதாவின் தாயார், காவல் ஆய்வாளர் மல்லிகார்ஜுனாவை செருப்பால் தாக்கியுள்ளார். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து மல்லிகார்ஜுனா தற்போது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சுனிதா மீதும் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

மல்லிகார்ஜுனாவை சுனிதாவின் ரெட்டியின் தாயார் செருப்பால் தாக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: