மகன் செய்த தவறுக்காக தாய்க்கு வழங்கப்பட்ட தண்டனை!

0
49

உத்திரபிரதேசத்தில் மகன் செய்த தவறுக்காக தாய்க்கு வழங்கப்பட்ட தண்டனை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Nojal கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 26 வயதுடைய வாலிபர் 20 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் ஓடியுள்ளனர். இதனால் கோபமடைந்த அப்பெண்ணின் குடும்பத்தார், அந்த வாலிபரின் அப்பா, அம்மா மற்றும் சகோதரனை அடித்து உதைத்துள்ளார்.

இதில், வேதனையான விடயம் என்னவென்றால், 40 வயதுடைய அந்த வாலிபரின் தாயை, அப்பெண்ணின் வீட்டார் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து தண்டனை வழங்கியுள்ளதுதான்.

இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதையடுத்து, அப்பெண்ணின் தந்தை மற்றும் அவரது இதரண்டு சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: