அதிர வைக்கும் காரணம் – போதை மருந்து பழக்கத்துக்கு உள்ளான பத்து வயது சிறுமி!!

0
248

மகளை இரும்பு சங்கிலியால் கட்டி வைத்திருக்கும் அப்பா: அதிர வைக்கும் காரணம்

பங்களாதேஷ்

போதை மருந்து பழக்கத்துக்கு உள்ளான பத்து வயது மகளை பாதுகாக்க அவரின் தந்தை இரும்பு சங்கிலியால் மகளை கட்டி வைத்துள்ளார்.

வங்கதேசத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. GMB Akash என்னும் பிரபல புகைப்பட கலைஞர் தனது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து பதிவேற்றியுள்ளார்.

Kamal Hossin என்பவர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரின் மகள் Santa (10). Kamal-ன் மனைவி உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில் கடந்த எட்டு மாதங்களாக Santa அடிக்கடி வீட்டிலிருந்து காணாமல் போய் விடுவார். பத்து நாட்கள் கூட வெளியில் இருந்து விட்டு வீட்டுக்கு வருவார்.

அப்படி ஒரு சமயம் அவர் காணாமல் போன போது Kamal மகளை தேடி சென்றுள்ளார். அப்போது Santa போதை மருந்து மற்றும் விபச்சார கும்பலுடன் ஒன்றாக இருப்பதை பார்த்து அதிர்ந்த Kamal மகளை மீட்டுள்ளார்.

பிறகு, செருப்பு தைக்க பயன்படும் பசையை போதை பொருளாக Santa உபயோகப்படுத்துவதையும், Kamal பார்த்துள்ளார்.

இதையடுத்து வீட்டிலிருந்து மகள் தப்பி செல்லாமல் இருக்க அவரின் கால்களை இரும்பு சங்கிலியால் Kamal கட்டி வைத்துள்ளார்.

இப்படி செய்யும் போது தனது மனதுக்கு கஷ்டமாக இருக்கும் எனவும், ஆனால் சங்கிலியை அவிழ்த்தால் Santa வீட்டிலிருந்து வெளியில் சென்று போதை கும்பலுடன் சேருகிறார் எனவும் Kamal கூறியுள்ளார்.

மாதம் 3900 ரூபாய் வருமானம் மட்டுமே வருவதால் Santa-வை நல்ல மருத்துவரிடம், தந்தையால் அழைத்து செல்ல முடியவில்லை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: