பெண் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியது சவுதி அரசு.

0
51

பெண் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியது சவுதி அரசு.

ரோபோ
ரோபோ

உலகின் முதல் முறையாக ‘ரோபோ’ ஒன்றுக்கு குடியுரிமை வழங்கியது சவுதி அரேபியா. ச’சோபியா’ என பெயரிட்டுள்ள அந்த ‘இயந்திர மனுஷி’க்கு (ரோபோ) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமையை வழங்கப்பட்டுள்ளது.

ஹாங்காங் நிறுவனமான ‘ஹன்சன் ரோபோடி’ நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹன்சன் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர். இது பெண் போன்று மிக இனிமையாக பேசிம் திறன் பெற்றுள்ளதால், கேட்கும் கேள்விகளுக்கு மனிதர்கள் போன்று சரமாரியாக பதில் அளிக்கிறது.

ரோபோ' சோபியா
ரோபோ’ சோபியா

இது அமெரிக்க நடிகை ஆட்ரி வெஹப்பர்னை போன்ற தோற்றத்தில் உள்ளது. பெண்களுக்கு சமவுரிமை இல்லாத சவுதி அரேபியாவில் பெண் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருப்பது குறித்து சமூக வலைத்தளத்தில் பொதுமக்கள் கடுமையாக விமர்சிக்கத் துவங்கியுள்ளனர்.

பல ஆண்டுகள் போராடியப் பின்னரே, பெண்கள் தனியாக வாகனம் ஓட்டும் உரிமையைப் பெற்றுள்ள நிலையில், பெண் ரோபோவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ள அரசு பொதுமக்களுக்கு இதனால் என்ன கூற நினைக்கிறது? எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழும்பியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: