பெண் தற்கொலை – சீதனத் தொகையை அதிகரிக்குமாறு மாப்பிள்ளை வீட்டாா் கோரியதால்

0
119

சீதனத் தொகையை அதிகரிக்குமாறு மாப்பிள்ளை வீட்டாா் கோரியதால் பெண் தற்கொலை

தென்மராட்சியைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் சீதனக் கொடுமையால் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

முன்பள்ளி ஆசிரியராகக் கடமையாற்றும்பெண்ணொருவருக்கு திருமணம் முற்றாகிய நிலையில், திடீரென சீதனத்தை அதிகரித்துத் தருமாறு மாப்பிள்ளை வீட்டார் தெரிவித்துள்ளதுடன், சீதனத்தை அதிகரித்துத் தந்தால்தான் திருமணம் நடக்கும் எனவும் எச்சரித்துச் சென்றுள்ளனர்.

குறித்த பெண்ணின் பெற்றோர் இருவரும் மரணமடைந்துள்ள நிலையில் குறித்த பெண் கொழும்பில் பணிபுரிகின்றார். இவரது சகோதரி தென்மராட்சியில் வசிக்கின்றார். தென்மராட்சியில் வசிக்கும் பெண்ணின் சகோதரியே திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

12 லட்சம் ரூபா சீதனம் என்று பேசி முடிவாகியிருந்தது. அதன் பின்னரே திருமண ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

திருமணத்துக்கான நாளும் குறிக்கப்பட்டு, மணப்பெண்ணுக்கான உடைகளும் வாங்கப்பட்ட நிலையில், நேற்று பெண்ணின் வீட்டிற்கு வருகை தந்த மாப்பிளை வீட்டினைச் சேர்ந்தவர்கள் 12 இலட்சம் சீதனம் போதாது. சீதனம் அதிகரிக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் இந்தத் திருமணம் நடைபெறாது எனத் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் இல்லாத குறித்த பெண்ணின் திருமணச் செலவுகள் அனைத்தையும் அவரது சகோதரியே ஏற்றுக்கொண்ட நிலையில், சீதனத் தொகை அதிகரித்தமையால் குறித்த பெண்ணின் சகோதரிக்கு மேலும் பணக் கஷ்ரம் ஏற்பட்ட நிலையில், குளியலறைக்குச் சென்ற மணப் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: