பெண்ணின் உள்ளாடையில் காவாலிகள் செய்த அசிங்கமான செயல். யாழின் நிலை என்ன?

0
216

பெண்ணின் உள்ளாடையில் காவாலிகள் செய்த அசிங்கமான செயல். யாழின் நிலை என்ன?

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் தனிமையில் வாழும் குடும்ப பெண்ணின் உள்ளாடைகளை திருடிய இளைஞர்கள் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் நேற்றயதினம் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது மறவன்புலோ கிழக்கு கடற்கரைப் பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ் நகரிலிருந்து வருகைதரும் இளைஞர்கள்குழுவும் மறவன்புலோவில் வசிக்கும் ஒரு சில இளைஞர்களும் இணைந்து மது அருந்துவது வழமையான செயற்பாடாகும்.

மது அருந்தும் குறித்த குழுவினர் போதை தலைக்கு ஏறியதும் கடலில் காணப்படும் மீனவர்களின் வலைகளை அறுத்து எறிவதும் அதனுள் காணப்படும் மீன்களை களவாடுவதும் பல மாத காலமாக நடைபெற்று வருகின்றது.

அது மட்டுமல்லாது போதையில் தகாத வார்த்தைகளை பேசுவதும் வீண் வம்புக்களில் ஈடுபடுவதும் வீதியால் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும் வழமையாக நடைபெற்றுவந்துள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு முறையிட்டபோதும் அவர்களின் உயிர் அச்சுறுத்தல் காரணமாக எவரும் வெளிப்படையாக முறைப்பாடு பதிவு செய்யாது இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றயதினம் வழமைபோன்று அதிசொகுசு காரில் வந்து குடிமனையை அண்டிய பகுதியில் மது அருந்திய இளைஞர்கள் குழு அப்பகுதியில் தனிமையில் வசிக்கும் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உள்ளாடைகள் மீது தமது விந்தினை பாய்ச்சி அசிங்கப்படுத்தியிருக்கின்றனர்.

குறித்த பெண் வருவதனை அவதானித்த இளைஞர் குழு கதவினை தள்ளி விழுத்தி வேலிகளை முறித்து பாய்ந்து ஓடியுள்ளனர். 
அறையில் சென்ற குடும்பப்பெண் அதிர்ச்சிக்கு உள்ளாகி அங்கிருந்து பொலிஸ் நிலையம் சென்று தனது கற்பின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு நேரடியாக இன்று வருகை தந்த பொலிஸார் குறித்த பெண்ணின் உள்ளாடைகளின் சேதங்களை பார்வையிட்டதுடன் விசாரணைக்காக இளைஞர் குழுவை பொலிஸ் நிலையம் வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 10 கிலோ கிராம் கஞ்கா கடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: