பெண்கள் சொல்ற இந்த வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியுமா?

0
247

பெண்கள் சொல்ற இந்த வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியுமா?

பெண்கள் மனதில் இருப்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்று சும்மாவா சொல்லியிருக்காங்க… மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் வேற ஒன்றை சொல்வார்கள். ஆனால் காதலன் அதனை உணர்ந்து சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். உங்க காதலி ஒரு வார்த்தை சொல்ல அது இப்ப எதுக்காக சொல்றாங்க அர்த்தம் தெரியாம… மண்டைய குழம்பியிருக்கீங்களா? உங்களுக்காக பெண்கள் மனதின் அடியாழம் வரைக்கும் போய் கொண்டு வந்திருக்கிற சில வார்த்தைகளும் அதனுடைய அர்த்தங்களும்….

I’m fine:-
பெண்கள் அடிக்கடி பயன்படுத்துற வார்த்தை இது. இப்படிச் சொல்றனால அவங்க நிம்மதியா இருக்காங்கன்னு அர்த்தமில்ல. அவங்க தனிமையா உணர்ந்தாலோ அல்லது மனம் சஞ்சலப்படும்படி எதாவது நடந்தாலோ இப்படித்தான் சொல்வாங்களாம்.அதனால் இந்த வார்த்தை சொல்லும் போது அவங்க டிஸ்ட்ரப்பா இருக்காங்கன்றத புரிஞ்சிகோங்க பாய்ஸ்

Whatever :-
எதுவா இருந்தாலும் எனக்கு ஒகே… எதுனாலும் சரி என்றால் நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் விஷயத்தில் அவர்களுக்கு விருப்பமில்லை என்று அர்த்தம்.அவங்க இந்த வார்த்தைய உச்சரிக்கிற தொனிய வச்சே நேரடி அர்த்தமா அல்லது நேர் எதிர் அர்த்தமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்.

I don’t care:-
இந்த வார்த்தையையும் நீங்க அடிக்கடி கேட்டு இருக்கலாம். இத உச்சரிப்பு மட்டுமில்ல அவங்களோட பாடி லாங்குவேஜே உணர்த்திரும். அப்செட்டில் இருக்கும் போது, பயங்கர கோபமாக இருக்கும் போது இப்படி சொல்வார்களாம். இப்படிச் சொன்னவுடன் நீங்களும் மீ டூ… என்று விலகிடாமல் ஐ ஆல்வேஸ் ஃபார் யூ என்று ஒரு ஹக் கொடுங்க…. உருகிடுவாங்க

Do what you want :- மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய தருணம் இது. உண்மையாக உங்கள் இஷ்டம் என்று சொல்லவில்லை. நீங்கள் சொல்வதில் உங்கள் காதலிக்கு விருப்பமில்லை அதே நேரத்தில் இந்த முடிவை உங்களிடம் சொல்லவும் விரும்பவில்லை என்று அர்த்தம்.

Nothing :- பலரது சண்டைகளின் துவக்கப்புள்ளியாய் இந்த வார்த்தை இருந்திருக்கும். அப்பாவி பாய்ஸ்… நத்திங் என்றால் சரி என்று தலையாட்டிவிட்டு போகக்கூடாது. 95 சதவீத பெண்கள் சொல்ற நத்திங் என்றால் சம்திங் என்று தான் அர்த்தம். சொல்வதற்கு சங்கடப்பட்டு நிற்கும் நேரங்களில் இந்த வார்த்தையை பயன்படுத்துவார்களாம்.

Go ahead :- இந்த வார்த்தையை உங்க காதலி சொல்லக் கேட்டவுடன் சந்தோஷமாக துள்ளி குதிச்சு மாட்டிக்காதீங்க…. நீங்க சொல்வதில் உங்கள் காதலிக்கு விருப்பமில்லை என்பதை டீசண்ட்டாக சொல்லியிருக்காங்க.

Don’t worry about it :- இந்த வாக்கியத்தை பயன்படுத்தும் சூழலை பொருத்து அர்த்தம் வேறுபடும். இப்படிச் சொன்னவுடனே அந்த டாப்பிக்கை மாற்றிவிடாதீர்கள்..அதில் உங்களுக்கு அதிகப்படியான அக்கறை இருப்பதாய் காட்டிக் கொள்ளுங்கள் ஒரு கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு எரிச்சலாக்காமள் வேறு விதமாக கேட்டால் கேர்லஸ் சரண்டர் ஆகிடுவாங்க.

Leave me alone :- ஆபத்தானது இது. விவாதங்களின் போது இப்படிச் சொன்னால் விவாதத்தில் தான் தோற்கப்போகிறோம் என்று உணர்ந்திருப்பார்கள் அல்லது முன் கோபம் தவறு என்று உணர்ந்திருப்பார்கள். இந்த வார்த்தையை சொன்னவுடன் விலகி ஓடிவிடாதீர்கள்… டாபிக் மாற்றினால் போதும்.

You don’t have to ask permission :-
இந்தியாவுக்கு சுதந்திரம் கெடச்ச ரேஞ்சுக்கு எல்லாம் ஃபீல் பண்ணாதீங்க பாஸ்…. இதுக்கு முன்னாடி உங்க லவ்வர் கிட்ட சொல்லாம என்னமோ செஞ்சு அத மறச்சிருப்பீங்க நல்லா நியாபகப்படுத்திப்பாருங்க. அத நீங்களாவே சொல்லணும்னு எதிர்ப்பாக்குறாங்க அப்டி இல்லன்னா இப்ப மட்டும் ஏன் சொல்றன்ற கோபத்தோட வெளிப்பாடு தான் அது.

Good luck :- இதை புரிந்து கொள்வதில் கொஞ்சம் சிக்கல்கள் இருக்கிறது. பேசிக்கொண்டிருக்கும் போது சட்டென இந்த வார்த்தை வந்தால் நீங்கள் மொக்கை போடுகிறீர்கள் என்று அர்த்தம். இல்லையென்றால் அடுத்த முறை நான் ஜெயிப்பேன் என்பதற்கான ரகசிய குறீயிடு.

I guess :- பெண்களிடமிருந்து அடிக்கடி எல்லாம் இந்த வார்த்தை வராது. ஏனென்றால் யோசிக்க எல்லாம் மாட்டார்கள் முடிவே செய்துவிடுவார்கள். விஷயம் தெரிந்து விட்டது அதில் சின்ன சந்தேகம் என்பதை இப்படிக் கேட்டு தெளிந்து கொள்வார்கள்.

okay :- குறுஞ்செய்திகளில் மாட்டும் விஷயம் இது. இப்படியென்றால் நீங்கள் சொல்வதில் உங்கள் காதலிக்கு விருப்பம் என்று அர்த்தம். இதே வெறும் கே… என்று மட்டும் அனுப்பினாள் சம்மதிமில்லை அல்லது நீங்கள் பேசுவது போர் சப்ஜெக்ட்டாக இருக்கிறது டாப்பிக்கை மாற்று என்பதற்கான சிக்னல் .

mmm../hmmm :- கான்வர்சேஷனலில் பாதி இப்படித் தான் ஓடும். இப்படிச் சொன்னதும் டாப்பிக்கை ட்ரேக் மாற்றுவதில் தான் உங்களுடைய புத்திசாலித்தனம் இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: