பெண்களின் உள்ளாடைகளை திருடிய புத்த துறவி சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகள்!

0
581

தாய்லாந்தில் துறவி ஒருவர் பெண்களின் உள்ளாடைகளை திருடுவது சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.தாய்லாந்தின் Suphaburi பகுதியைச் சேர்ந்தவர் Khajornnetikhun(40), இவருடைய மனைவி மற்றும் பெண் குழந்தையின் உள்ளாடைகள் தொடரந்து காணமல் போயுள்ளது.

இதனால் இதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக, வழக்கம் போல் துணிகள் துவைத்து காயப்போடப்படும் பகுதியில் சிசிடிவி கமெராவை பொருத்தியுள்ளார்.அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் துறவி ஒருவர் அங்கு வந்து பெண்களின் உள்ளாடைகளை திருடிச் செல்கிறார்.

துறவியின் வைரல் வீடியோ!

துறவி இது போன்ற செயலில் ஈடுபட்டது அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், அந்த துறவியின் பெயர் Theeraphap Worradilok(49) என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு உடல் மற்றும் மனதளவில் பிரச்சனைகள் இருப்பதாகவும், அது தொடர்பாக தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும், தற்போது அதை நிறுத்தியதால், விசித்திரமாக இது போன்ற செயலில் ஈடுபட்டு வருதாகவும் அவருடன் இருக்கும் துறவிகள் கூறியுள்ளனர்.

இருப்பினும் அவரை பொலிசார் தேடிவருவதாகவும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பின்னரே முழுமையான உண்மை தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.

துறவியின் வைரல் வீடியோ

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: