புதுக்குடியிருப்பு வீடு ஒன்றில் நடந்த பயங்கரம்.

0
119

புதுக்குடியிருப்பு வீடு ஒன்றில் நடந்த பயங்கரம்.

முல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்­பில் வீடொன்­றுக்­குள் புகுந்த கொள்­ளை­யர்­கள் பணம் மற்­றும் நகை­க­ளைக் கொள்­ளை­ய­டித்­துச் சென்­றுள்­ள­னர்.

இந்­தச் சம்­ப­வம் நேற்று அதி­காலை நடந்­துள்­ளது.

பரந்­தன் வீதி, முத­லாம் வட்­டா­ரத்­தில் வசிக்­கும் வர்த்­த­கர் ஒரு­வ­ரின் வீட்­டி­லேயே இந்­தக் கொள்­ளைச் சம்­ப­வம் நடந்­துள்­ளது.

“கொள்­ளை­யர்­கள் வந்­ததோ, பொருள்­கள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டதோ எமக்­குத் தெரி­யாது. காலை­யில் கண்­வி­ழிக்க முடி­ய­வில்லை. தொண்டை வறண்­டி­ருந்­தது. எனது இடுப்­புப் பட்டி அவிழ்க்­கப்­பட்­டி­ருந்­தது. மயக்க மருந்து விசி­றப்­பட்­டுள்­ளது என்றே நினைக்­கின்­றோம்.”- என்று வீட்­டின் உரி­மை­யா­ளர் தெரி­வித்­தார்.

நடந்த பயங்கரம்
நடந்த பயங்கரம்

வர்த்­த­க­ரின் வீடு புதி­தாக அமைக்­கப்­ப­டு­கின்­றது. கட்­டு­மா­னப் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. கத­வு­கள் பூட்­டி­யி­ருந்த நிலை­யில் கழி­வ­றை­யில் கண்­ணாடி யன்­னல் பொருத்­து­வற்கு இருந்த துவா­ரத்­தின் வழி­யாக கொள்­ளை­யர்­கள் நுழைந்­துள்­ள­னர்.

அதற்­கான தட­யங்­கள் காணப்­ப­டு­கின்­றன என்று பொலி­ஸார் தெரி­விக்­கின்­ற­னர்.

ஒரு லட்­சத்து 70 ஆயி­ரம் ரூபா பணம், வீட்­டில் உறங்­கிய பெண் ஒரு­வ­ரின் கழுத்­தில் இருந்த சங்­கிலி, தோடு, அலு­மா­ரி­யில் இருந்த அட்­டி­யல் என அனைத்­தும் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டுள்ன என்று கூறப்­ப­டு­கின்­றது.

கொள்­ளைச் சம்­ப­வம் தொடர்­பாக புதுக்­கு­டி­யி­ருப்­புப் பொலி­ஸா­ரி­டம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: