பெண்களை பாதுகாக்கும் புதியவகை காலணி கண்டுபிடிப்பு

0
108

பெண்களிடம் தவறாக நடக்கும் ஆண்களுக்காகவே உருவாக்கப்பட்ட ‘எலக்ட்ரோ காலணி’

பெண்க‌ளை‌ப் பாதுகாக்கும் நோக்கில் தெலங்கானாவைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் எலக்ட்ரோ ஷூ (ELECTRO SHOE) எனும் ‌மின்சாரம் பாய்ச்சும் காலணியை வடிவமைத்துள்ளார்.

புதியவகை காலணி
புதியவகை காலணி

ஹைதராபாத்தில் வசித்து வரும் சித்தார்த் மண்டல் என்ற 18 வயது மாணவர் எலக்ட்ரோ ஷூ ஒன்றை வடிவமைத்துள்ளார். பெண்கள் குற்ற நிகழ்வுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த வகை காலணி உதவிகரமாக இருக்கும் என மாணவர் சித்தார்த் மண்டாலா தெரிவி‌த்துள்ளார். ஆற்றலை, மின்சாரமாக மாற்று‌ம் தொ‌ழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காலணி, பெண்களை தாக்கவரும் எதிரிகள் மீது மின்சாரத்தை பாய்ச்சும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஆபத்து நேரிடும்போது அவர்களின் உறவினர்களுக்கும், அருகில் உள்ள காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கும் சிறப்பம்சங்களுடன் இந்த காலணி தயாரிக்க‌ப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: