பிள்ளைப் பேற்றை கவனிக்க வந்த வேலைக்காரி குடித்துவிட்டு மாமரத்தில் ஏறியதால் விழக்குமாத்தால் கவனிக்கப்பட்டார்!!

0
97

பிள்ளைப் பேற்றை கவனிக்க வந்த வேலைக்காரி குடித்துவிட்டு மாமரத்தில் ஏறியதால் விழக்குமாத்தால் கவனிக்கப்பட்டார்!!

யாழ் கொக்குவில் பகுதியில் வீடு ஒன்றில் பிள்ளைப் பேறு பார்ப்பதற்காக ஒரு மாதகாலம் வேலைக்கு வந்த வேலைகாரி வீட்டில் இருந்த சாராயத்தைக் குடித்துவிட்டு கடும் போதையில் கத்திக் குளறிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

வங்கி ஒன்றில் வேலை செய்யும் இளம் உத்தியோகத்தர் ஒருவர் தனது மனைவியின் பிள்ளைப் பேற்றை கவனித்து மனைவிக்கு சரியான முறையில் சரக்குக் கறி வைப்பதற்கும் மனைவி பிள்ளையின் ஆடைகளை துவைப்பதற்கும் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த ஒரு வேலைகாரியை 45 ஆயிரம் சம்பளம் கொடுத்து ஒரு மாதம் நியமித்திருந்தார்.

தனியார் வைத்தியசாலை ஒன்றில் சுகப்பிரசவத்தில் குறித்த அலுவலரின் மனைவி குழந்தை பெற்று கடந்த வெள்ளிக்கிழமை வீடு வந்துவிட்டார். குறித்த அலுவலர் தனது மனைவியின் பத்திய உணவுப் பாவனைக்காக மிகவும் விலைகூடிய வெளிநாட்டுச் சாராயத்தை வாங்கி வேலைகாரியிடம் கொடுத்திருந்தார். அந்த வேலைகாரி நேற்று மாலை அந்த சாராயத்தில் குறிப்பிடத்தக்க அளவை இரகசியமாக அருந்தியுள்ளார். அந்த சாராயம் விசேட தன்மை கூடியதாக இருந்ததால் வேலைகாரிக்கு வெறியேறியுள்ளது. குறித்த வேலைகாரி கடும் வெறியில் கத்திக் குளறத் தொடங்கியதுடன் வீட்டில் உள்ள மாமரம் ஒன்றில் தொங்கி ஏறியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இது தொடர்பாக பொலிசாருக்கு அறிவிப்பதற்கு முயன்றுள்ளனர்.

குறித்த வேலைகாரி சாராயத்தை அருந்திவிட்டார் என்பதை உணர்ந்த அயல்பகுதியில் வசிக்கும் அனுபவஸ்தர்கள் இது தொடர்பாக வங்கி அலுவலருக்கு நிலமையை புரியப்படுத்தியுள்ளனர். நிலைமையை உணர்ந்த வங்கி பெண்ணின் தாயார் விளக்குமாறு ஒன்றால் வேலைக்காரிக்கு அடித்து கீழே இறக்கி தலையில் தேசிக்காய் தேய்த்து வெறியை இறக்க முற்பட்டதாக தெரியவருகின்றது.

இருந்தும் நேற்று இரவு 9 மணி வரையும் வேலைகாரியின் அட்டகாசம் இருந்ததாக அப்பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: