பிறந்த குழந்தைக்கு உடனடியாக ஆதார் அட்டை வழங்கியது அரசு.

0
167

பிறந்த குழந்தைக்கு உடனடியாக ஆதார் அட்டை வழங்கியது அரசு!!

மஹாராஷ்டிர மாநிலத்தில், பிறந்து 6 நிமிடமே ஆன பெண் குழந்தைக்கு அம்மாநில அரசு ஆதார் அட்டையை வழங்கியுள்ளது.

மகாராஷ்ட்ர மாநிலம் உஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று அதிகாலை 12.03 மணியளவில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பாவ்னா சந்தோஷ் ஜாதவ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் குழந்தைக்கு ஆதார் எண் கேட்டு பெற்றோர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். அடுத்த 6வது நிமிடத்தில் அதாவது 12.09 மணியளவில் குழந்தைக்கான ஆதார் எண் வழங்கப்பட்டுவிட்டதாக மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும் இந்த குழந்தைக்கு ஆதார் எண் வழங்கியது போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஆதார் எண் வழங்கப்படும் என்று ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். உஸ்மானாபாத்திற்கு இது பெருமை தரும் சம்பவமாகக் கருதப்படுகிறது. தாயும் சேயும் நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாவட்டத்தில் உள்ள பெண்கள் மருத்துவமனையில், கடந்த ஓராண்டில் மட்டும் 1300 குழந்தைகள் ஆதர் எண் பெற்றுள்ளதாகவும் கருத்து கணிப்பு கூறுகிறது

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: