பிறந்து 21 நாளான குழந்தை காச்சலால் உயிரிழந்த பரிதாபம்!

0
56

பிறந்து 21 நாளான குழந்தை காச்சலால் உயிரிழந்த பரிதாபம்!

பிறந்து 21 நாள்­க­ளே­யான பெண் குழந்தை 2 நாள்­கள் பீடிக்­கப்­பட்­டி­ருந்த ஒரு வகைக் காய்ச்­ச­லால் நேற்று உயி­ரி­ழந்­தது.

குழந்­தை­யின் குருதி மாதிரி பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

கலை­வாணி வீதி வட­லி­ய­டைப்­பைச் சேர்ந்த சுமன் அபிஷா என்ற குழந்­தையே உயி­ரி­ழந்­தது.

குழந்­தைக்­குக் கடந்த 21 ஆம் திகதி சனிக்­கி­ழமை இரவு காய்ச்­சல் ஏற்­பட்­டுள்­ளது. குழந்­தை­யின் உடலை ஈரத் துணி­யால் துடைத்­துள்­ள­னர் (ஒத்­த­டம்). மீண்­டும் குழந்­தைக்­குக் காய்ச்­சல் ஏற்­பட்­டுள்­ளது.

நேற்­று­முன்­தி­னம் காலை­யில் தனி­யார் வைத்­தி­ய­சா­லை­யில் சிகிச்சை பெறப்­பட்­டது. அன்­றி­ரவு குழந்­தைக்­குப் பாலூட்­டிய பின்­னர் குழந்­தை­யைத் தாய் உறங்க வைத்­தார்.

நேற்­றுக் காலை பால் கொடுப்­ப­தற்­கா­கக் குழந்­தையை எழுப்­பி­ய­போது குழந்தை உணர்ச்­சி­யற்ற நிலை­யில் காணப்­பட்­டது.

குழந்­தையை யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்­குக் கொண்­டோ­டி­னர். குழந்தை ஏற்­க­னவே இறந்து விட்­ட­தா­கப் பரி­சோ­த­னை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

குழந்­தைக்கு ஏற்­பட்­டது என்ன வகைக் காய்ச்­சல் என்­பது தெரி­ய­வ­ர­வில்லை. அத­னா­லேயே குழந்­தை­யின் குருதி மாதிரி பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

போதனா வைத்­தி­ய­சா­லை­யின் திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் விசா­ரணை மேற்­கொண்­டார். குழந்­தை­யின் சட­லம் பெற்­றோ­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: