பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை 45ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாய்!

0
52

பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை 45ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாய்!

உத்திர பிரதேசத்தில் உடல்நலம் பாதித்த கணவனை காப்பாற்றுவதற்காக பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை 45ஆயிரம் ரூபாய்க்கு விற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பரேலி அடுத்த டாக்கியா கிராமத்தை சேர்ந்தவர் ஹர்ஷ்வரூப். கூலித் தொழிலாளியான இவர், சமீபத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்துள்ளார்.

ஏழ்மையான நிலையில் இருப்பதால் கணவனை சிகிச்சைக்கு பணம் இல்லாததால், ஸ்வரூப்பின் மனைவி சஜூவுக்கு கடந்த மாதம் 14ம் திகதி, மூன்றாவது முறையாக பிறந்த ஆண் குழந்தையை விற்க முடிவெடுத்துள்ளார்.

தனது குழந்தையை, குழந்தையில்லாத தம்பதியினருக்கு 45 ஆயிரம் ரூபாய்க்கு சஜூ விற்றது தற்போது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட தமது கணவருக்கு சிகிச்சை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஜூ வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: