பிரித்தானியாவில் உள்ள உணவகத்தில் துப்பாக்கி சூடு: இரண்டு சிறுவர்கள் படுகாயம்

0
44

பிரித்தானியாவில் உள்ள உணவகத்தில் துப்பாக்கி சூடு: இரண்டு சிறுவர்கள் படுகாயம்

பிரித்தானியாவில் உள்ள துரித உணவகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் இரண்டு சிறுவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

நாட்டின் கிழக்கும் லண்டனில் தான் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 8.40 மணிக்கு நடந்துள்ளது.

சம்பவத்தில் இரண்டு 16 வயது சிறுவர்களில் ஒருவருக்கு பின்பக்கத்திலும், இன்னொருவருக்கு காலிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவர்களை மீட்க சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு சென்றது.

இரண்டு சிறுவர்களின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வரும் நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தங்களிடம் கூறலாம் என பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: