பிரித்தானியாவில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இளம் பெண்களுக்கு நடந்தது என்ன?

0
89

பிரித்தானியாவில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இளம் பெண்களுக்கு நடந்தது என்ன?

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரித்தானியாவை சேர்ந்த பெண் உட்பட இருவர் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த ஹன்னா வைட்லி (23) என்ற பெண் தனது நண்பர்களுடன் இந்தியாவின் கோவாவுக்கு சுற்றுலா வந்தார்.

கடந்த 22-ஆம் திகதி தனது சக நாட்டு சுற்றுலா பயணிகளுடன் ஹன்னா கோவாவில் உள்ள கனசோனா கடற்கரை பகுதியில் பைக் ஓட்டி சென்றார். அவருடன் வேறு சிலரும் பைக்கில் சென்றனர்

அப்போது எதிரில் வந்த டிரக் லொறி பைக்குகள் மீது மோதியதில் டயரில் சிக்கி ஹன்னா உயிரிழந்தார்.

மற்றொரு பிரித்தானியா சுற்றுலா பயணியான டேனியல் ஜானும் (38) இந்த விபத்தில் உயிரிழந்தார்.

கேரி போவல் என்ற பிரித்தானியரும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரின் உடல்நிலை குறித்த விபரம் தெரியவில்லை.

ஆபத்தான முறையில் லொறியை ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினரோடு எங்கள் ஊழியர்கள் தொடர்பில் உள்ளார்கள்.

இந்திய அதிகாரிகள் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள் என கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுலா
இந்தியாவுக்கு சுற்றுலா
பிரித்தானிய இளம் பெண்
பிரித்தானிய இளம் பெண்
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: