பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

0
163

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது
நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை, செரீனா வில்லியம்ஸ், இந்தாண்டு ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றார். முன்னதாக, தான் கர்ப்பமாக இருப்பதாக கூறினார்.

36 வயதாகும் செரீனா வில்லியம்ஸ், தனது காதலன், ரெட்டிட் இணை உரிமையாளர் அலெக்சிஸ் ஓகானியனுடன் பழகி வந்தார். 2015 டிசம்பரில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனிடையில் செரீனா கர்ப்படைமடைந்தார். குழந்தை பிறந்த பிறகு, இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்வதற்கு இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

பெண் குழந்தை

இந்த ஜோடிக்கு நேற்று காலை பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை, 3.09 கிலோ எடையுடன் உள்ளதாக தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாகவே, தாய்மை குறித்தும், தனது கர்ப்ப கால அனுபவங்கள் குறித்து, இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் படங்களையும், செய்தியையும் வெளியிட்டு வந்தார் செரீனா. 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா, அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்க உள்ள ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து மீண்டும் களமிறங்கப் போவதாகவும் அவர் கூறினார்.
பெண் குழந்தை பெற்றெடுத்த செரீனாவுக்கு, ரோஜர் பெடரர் உள்ளிட்ட டென்னிஸ் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யுஎஸ் ஓபனில் விளையாடி வரும் பெரியம்ப்பா வீனஸ் வில்லியம்ஸ், தான் மகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறினார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: