பிணவறையில் சடலமாக இருந்த பெண்ணுக்கு திடீர் பிரசவம்: அதிர்ச்சி சம்பவம்!

0
109

தென் ஆப்பிரிக்காவில் பிணவறையில் சடலமாக வைக்கப்பட்டிருந்த பெண் குழந்தையை பிரசவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த செய்தியை அந்நாட்டின் ஊடகம் வெளியிட்டுள்ளது.

தயிஸி கிராமத்தை சேர்ந்த 9 மாத கர்ப்பிணி டோயி (33) சில தினங்களுக்கு முன்னர் திடீரென இறந்து போனார்.

நிறைமாத கர்ப்பினி திடீரென இறந்துப் போனது கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி நிலையில், இறுதிசடங்குக்கு பிறகு சடலங்களை தகனம் செய்வோரிடம் டோயியின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் சடலம் பிணவறையில் வைக்கப்பட்ட நிலையில் சடலத்தை புதைப்பதற்காக பிணவறை ஊழியர்கள் வெளியே எடுத்தனர்.

அப்போது டோயியின் கால்களுக்கு இடையே பச்சிளம் குழந்தை இறந்தநிலையில் கிடந்ததை பார்த்த பிணவறை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இறந்த பெண் எப்படி பிரசவித்திருக்க முடியும் என்று குழப்பத்தில் ஆழ்ந்த நிலையில் இது குறித்து கிராம மக்களுக்கு தகவல் தரப்பட்டது.

டோயியின் தாய் கூறுகையில், இது தீய சக்தியின் வேலைதான், என் மகள் நிறை மாத கர்ப்பிணியாக இறந்ததற்கும் தீய சக்திதான் காரணம், இரண்டு சடலத்தையும் எரித்து விடுங்கள் என கதற அதன்படியே புதைக்கப்பட்டது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இறந்த உடலின் நுண்ணியிரிகளின் செயல்பாட்டாலோ அல்லது இறந்த பின்பு நடக்கும் தசை தளர்வாலோ குழந்தை வெளியே தள்ளப்பட்டிருக்கலாம், இது இயற்கையான நிகழ்வே என கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: