பிக் பாஸ் வீட்டிற்குள் பவர் ஸ்டார் சீனிவாசன்.!

0
358

பிக் பாஸ் வீட்டிற்குள் பவர் ஸ்டார் சீனிவாசன்.!

பவர் ஸ்டார் சீனிவாசன் இந்த பெயர் தமிழக திரையுலக ரசிகர்களுக்கு மிகுந்த பரிட்சயமான பெயர். இவர் அதிமுக துவங்கி பல கட்சிகளில் முக்கிய பங்கு வகித்தவர். பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்.

நகைச்சுவை வேடங்களில் அதிரடியாக நடித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர். லத்திகா போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து ரஜினி, கமலுக்கு நான் போட்டியென தானாகவே அறிவித்துக்கொண்ட இவர் தற்போது சின்னத்திரையில் கமல் தொகுத்து வழங்கி வரக்கூடிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவர் ஸ்டார் களமிறங்கினால், ஏற்கனவே உள்ளே உள்ள சினேகன் அவர்களுக்கு கடுமையான போட்டியாளராக இருப்பார் என கருதப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: